Skin Care Tips: முகத்தை பாதுக்காக்க பராமரிப்பு அவசியம்! எது முக்கியம் தெரியுமா?
Skin Care Tips: இன்ஸ்டண்ட் பொலிவு , இன்ஸ்டண்ட் பிரைட் முகம் என்று பலர் உடனடி தீர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.
சுற்றுசூழல் மாசு பாடு பூமியை பாதிப்படைய செய்வது மட்டும் இல்லாமல் மனிதர்களாகிய நம்மையும் அதிகம் பாதிப்படைய செய்கிறது. இந்த மாசு காரணிகளால் அனைவரது சருமம் பெரும் பாதிப்பு அடைகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல இயற்கையான தீர்வுகள் இருக்கின்றன. ஆனால் சிலர் இதனை செய்வதில்லை இன்ஸ்டண்ட் பொலிவு , இன்ஸ்டண்ட் பிரைட் முகம் என்று பலர் உடனடி தீர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.
முகம், சருமம் என அனைத்து பகுதிகளிலும் இறந்த செல்களை மீட்டு உருவாக்கம் செய்யவும். அதிக புற ஊதா கதிர்களால் முகம் கருமை அடைவைதை தவிர்க்கவும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். இதன் காரணமாகவே பல இயற்கை மருத்துவ முறை இன்றளவும் பிரபலமாக உள்ளது.
ஈரப்பதத்தை பாதுகாத்தல்
முகத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பது சரும பராமரிப்பில் முதன்மை படியாகும். இதனை தினம் தோறும் கடைபிடித்தால், முகம் மிகவும் தெளிவாகவும், பொலிவு ஆகவும் இருக்கும். இதற்கு சிறந்த ஒரு பொருள் தான் கற்றாழை (Aloe vera) ஆகும். தினமும் குளித்து முடித்த பின் கற்றாழையை நம் முகத்தில் தடவ வேண்டும். இது இயற்கையான முறையில் முகத்தி ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
சுத்தமாக வைத்ததிருத்தல்
வெளியே சென்று வந்த பின்னும், மேக்கப்பை கலைத்த பின்னும் குளிர்ந்த நீரால் நன்கு முகத்தை கழுவ வேண்டும். குறைந்தது மூன்று முதல் 5 நிமிடங்கள் வரை முகத்தை கழுவ வேண்டும். சில சமயங்களில் ரோஸ் வட்டார் அல்லது பச்சை பசும் பாலால் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
இயற்கை மாஸ்குகள்
முகத்தில் அடிக்கடி ஃபேஸ் பேக்குகள் போட வேண்டும். கடலை மாவு, தயிர் ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். மேலும் முல்தாணி மிட்டி, கஸ்தூரி மஞ்சள் ஆகிய கலவையும் சிறந்த பொலிவை தருகின்றன. மேலும் துளசி பொடி, அரிசி மாவு விட்டமின் ஈ கேப்சூல் ஆகியவையும் முகத்தின் மீது போடும் போது நல்ல ரிசல்டை தருகின்றன.
உணவிலும் கவனம்
சருமத்தை பாராமரிக்க வெளிப்பகுதியில் உள்ள பாதுக்கப்பு நடவடிக்கை போலவே உட்பகுதிகளுக்கும் வேண்டும். சிறந்த ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டு வருவது ஆரோக்கியமான சருமத்தை தருவதற்கும் பயன்படும். பழங்கள், நட்ஸ், இயற்கை காய்கறிகள் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகமான ஸ்ட்ரீட் பூட்களை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். வெள்ளை சர்க்கரை போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.
நிம்மதியான உறக்கம்
ஒவ்வோர் நாளும் நிமிமதியான உறக்கம் உங்களது முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரியாக தூங்காதவர்களின் முகத்தை விட சரியாக தூங்கியவர்களின் முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும். இந்த நிம்மதியான தூக்கம் கண்களுக்கு கீழ் கருவளையம் வருவதை தடுக்க உதவுகிறது. இவை அனைத்தையும் பின்பற்ற ஒரு நாளில் சில மணி நேரங்கள் மட்டுமே போதும். டிவி, ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பயன் படுத்துவதை தவிர்த்து சரும பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.
டாபிக்ஸ்