Beauty Tips: கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர வாரம் ஒருமுறை இப்படி செய்யுங்கள்!
கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்ற ஆசை எந்தப் பெண்ணுக்குத்தான் இருக்காது. அடர்த்தியான சுருள் கூந்தல் இடுப்புக்குக் கீழ் தழையத் தழையை வளரவேண்டும் என்ற இயல்பான ஆசை பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும். இதற்கு அவர்களது இளம் வயதிலிருந்தே சரியான கூந்தல் பராமரிப்பை செய்து வர வேண்டும். இருப்பினும் கூந்தலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கான இயற்கையான வழிமுறைகள் நிறைய உள்ளன. சில வழிமுறைகளை வாரம் ஒரு முறை செய்தால்கூட நல்ல பலன்களைப் பெறலாம்.
இவ்வாறு வாரம் ஒருமுறை செய்யக் கூடிய கூந்தல் பராமரிப்பு அலுவலகத்துக்குச் செல்லக்கூடிய எல்லாப் பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வதற்கும் சிரமம் இருக்காது. வார விடுமுறை நாட்களில் ஹாய்யாக டிவியை பார்த்துக் கொண்டே செய்து விடலாம்.
இந்தக் கூந்தல் பராமரிப்பை முதல் எண்ணெய் மசாஜ்ஜில் தொடங்கவும். எண்ணெய்யை உரிஞ்சக்கூடிய வறண்ட கூந்தலில் இளம் சூடான எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி நீங்களே முடியை மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.