Kids Health: குழந்தைகளுக்கான டான்சிலை எளிதில் குணப்படுத்தும் இயற்கை வழிகள்
குழந்தைகளுக்கான டான்சிலை எளிதில் குணப்படுத்தும் இயற்கை வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
டான்சில் கற்கள் பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டதுண்டா? இது பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற கற்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, வாயிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கும் நச்சுகள் கால்சிய கூறுகளாக மாறி கடினத்தன்மை பெறும் நிலை தான் இந்த டான்சில் கற்கள் ஆகும். வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, காது வலி, தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம் போன்றவை இந்த பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.
உப்பு நீர் டான்சில் கற்களுக்கு மற்றொரு எளிய தீர்வு உப்பு. தினசரி நமது உணவில் ஒரு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உப்பு, கிருமிகளுடன் போராடி, டான்சில் கற்களைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.
ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வாயில் ஊற்றி நன்றாகக் கொப்பளிக்கவும். இந்த முறையை ஒரு நாளில் பல தடவை பின்பற்றவும். இந்த டான்சில் அழற்சி கரைவதற்கு கடினமாக இருந்தாலும், உப்பு இதனை எளிதில் செய்து விடுகிறது.
ஆயில் புல்லிங் ஆரோக்கியமான வாய் வழி சுகாதாரத்துக்கான ஒரு அற்புதமான தீர்வு. ஆயில் புல்லிங் மிகவும் எளிமையானது. பல காலமாக, ஆயுர்வேத சிகிச்சைகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதால் கிருமிகள் அழிக்கப்படுகிறது, பற்களில் உள்ள நச்சுகள் வெளியாகிறது, டான்சில் கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்ய பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் ஆயில் புல்லிங் செய்யலாம். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மிக எளிதான முறையில் வாயில் கிருமிகள் வராமல் தடுக்க ஆயில் பபுல்லிங் ஒரு சிறப்பான தீர்வாகும்.
நீர்ச்சத்துடன் இருப்பது மனித உடல் 90% தண்ணீரால் ஆனது. நம்மில் பலர், உடல் செயல்பாட்டுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. மேலும், வாயில் உண்டாகும் கிருமிகள் வளர்ச்சியைத் தடுப்பதில் உமிழ்நீர் சுரப்பு மிகவும் அவசியம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, உங்கள் வாய் குறைந்த உமிழ்நீரை சுரக்கிறது. இதனால் கிருமி தொற்று பாதிப்பு அதிகரித்து, டான்சில் கற்கள் உருவாகிறது. ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகி நீர்ச்சத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
இருமல் மூலமாக டான்சில் கற்களை வெளியேற்றுவது நீங்கள் நினைக்கும் அளவுக்கு எளிதான காரியம் அல்ல. ஆனால் இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும். இருமுவதால் கற்கள் வெளியேறியவுடன், உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், மீண்டு பக்டீரியா வாயிற்குள் புகாமல் தடுக்க முடியும்.
டாபிக்ஸ்