Paruthi Paal: மாதவிடாய் பிரச்சனையா.. பெண்களே பருத்தி பாலை மட்டும் சாப்பிட்டு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paruthi Paal: மாதவிடாய் பிரச்சனையா.. பெண்களே பருத்தி பாலை மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Paruthi Paal: மாதவிடாய் பிரச்சனையா.. பெண்களே பருத்தி பாலை மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2023 03:03 PM IST

மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால்

பருத்தி பால்
பருத்தி பால்

இதிலும் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால்

பருத்தி பால் மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லாது, நெஞ்சு சளிக்கும் உடனே தீர்வளிக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. நிறைய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலம் தருகிறது. சரி இப்படி ஏராளமான பலன்களை தரும் பருத்தி பால் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பருத்தி கொட்டை- 2 கப்

வெல்லம் - 1 1/2 கப்

பச்சரிசி-1/4 கப்

ஏலக்காய் - 5

சுக்கு-ஒரு சிறிய துண்டு

தேங்காய் ஒரு கப்

பருத்தி பால் செய்முறை

பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்தி பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஊற வைக்க வேண்டும்.

இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்தி கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்து கொள்ள வேண்டும்.

அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்தி பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பிஞ்ச் உப்பை கலந்து கொள்ள வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் பால் கட்டி பட்டு விடும்.

பருத்தி பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து கிளற வேண்டும். இதையடுத்து நன்றாக கொதித்த பின் ஏலக்காய் மற்றும் சுக்கை நன்றாக பொடி செய்து அதை பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு தேங்காயை சில்லாகவே அல்லது துருவியோ சேர்த்துக்கொள்ளலாம். தேவை என்றால் தேங்காயை லேசாக நெய்யில் வதங்கி சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையை அதிகரிக்க உதவும். இனி சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்தி பாலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண் பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.