தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Heavy Menstrual Flow : நாப்கீன்கள், டாம்பான்ஸ் மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் : அதிக உதிரப்போக்குக்கு எது சிறந்தது?

Heavy Menstrual Flow : நாப்கீன்கள், டாம்பான்ஸ் மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் : அதிக உதிரப்போக்குக்கு எது சிறந்தது?

Priyadarshini R HT Tamil
Sep 11, 2023 11:00 AM IST

Heavy Menstrual Flow : சிலருக்கு மாதவிடாய் காலங்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு கட்டாயம் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெறுவது அவசியம். அதிக உதிப்போக்கு ஏற்படும்போது, எது உங்களுக்கு சிறந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Heavy Menstrual Flow : நாப்கீன்கள், டாம்பான்ஸ் மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் : அதிக உதிரப்போக்குக்கு எது சிறந்தது?
Heavy Menstrual Flow : நாப்கீன்கள், டாம்பான்ஸ் மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் : அதிக உதிரப்போக்குக்கு எது சிறந்தது?

ட்ரெண்டிங் செய்திகள்

மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளே மற்றவற்றைவிட உதிரப்போக்குக்கு சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை 61 மிலி வரை உதிரத்தை தாக்குபிடிக்கின்றன. நாப்கீன்கள், டாம்பான்கள், மென்ஸ்ட்ரூவல் கப்கள் அனைத்தும், 20 முதல் 50 மிலி அளவு மட்டுமே உதிரத்தை பிடிக்கின்றன.

அதிக உதிரப்போக்கு மெனோர்ஹாஜியா என்று அழைக்கப்படுகிறது. இது ஹார்மோன்கள் சமமின்மை, ஃபைபிராய்ட்கள் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது. ஹார்மோன் சமமின்மை, குறிப்பாக ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோனைவிட அதிகம் சுரக்கும்போது, அதிக உதிரப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பாகிவிடுகிறது.

அதிக உதிரபோக்குக்கு உதவக்கூடியது

அதிக உதிரப்போக்குக்கு உதவக்கூடியது எது என்பதை சொல்வது சிறிது கடினம்தான் என்றாலும், ஒருவருடைய மாதவிடாய் அளவைப்பொறுத்து அது மாறுபடுகிறது.

அதிகம் உறிஞ்சக்கூடிய நாப்கீன்கள், ஒவ்வொரு 4 அல்லது 5 மணி நேரத்துக்கு ஒருமுறையும் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

சிலருக்கு டாம்பான்கள் பொருந்தும். அதை உங்கள் வழக்கமான உதிரப்போக்கின் அளவைப்பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மென்ஸ்ட்ரூவல் கப்கள் உறிஞ்சாது, உதிரத்தை சேகரிக்கும். இதனால் டாம்பான்களைவிட அதிக ரத்தத்தை உறிஞ்ச முடியும். இவை மீண்டும் உபயோகிக்க முடிந்தவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

நன்மைகள்

மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகள் இவற்றிற்கெல்லாம் மாற்றாக உள்ளது. ஆனால் அதிலும் சில பிரச்னைகள் உள்ளது.

அதிக உதிரப்போக்குக்கு உகந்தது. மற்ற பொருட்களைவிட சிறந்தது.

இந்த டிஸ்கை சரியாக பொருத்திக்கொண்டாலே போதும், உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்.

இவற்றையும் மறுமுறை பயன்படுத்தலாம்.

தீமைகள்

இதை உபயோகிப்பது சிலருக்கு சவாலாக இருக்கும்.

இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் கடினம்.

சில பெண்களுக்கு அசௌகர்யமாக இருக்கும்.

நாப்கீன்கள் மற்றும் டாம்பான்களை 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். மென்ஸ்ட்ரூவல் டிஸ்க்கள் மற்றும் கப்களை 12 மணி நேரத்திற்கு வைத்திருக்கலாம். இவை ஒரு சிலருக்கு அவர்களின் உதிரப்போக்கு அளவைப்பொறுத்து வேறுபடும்.

அதிக உதிரப்போக்குக்கு நாப்கீன்கள் மற்றும் டாம்பான்கள் உபயோகிக்கும்போது,

சரியாக உறிஞ்சக்கூடியதை தேர்ந்தெடுங்கள்

டாம்பான் அல்லது நாப்கீனை உங்கள் உதிரப்போக்கின் அளவுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். நாப்கீன்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. அதிக உதிரப்போக்குக்கு அதிகம் உறிஞ்சக்கூடிய நாப்கீனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். டாம்பான்களிலும் பல்வேறு உறிஞ்சக்கூடிய அளவுகள் இருக்கும்.

அடிக்கடி மாற்றுங்கள்

நீங்கள் நாப்கீன்கள் அல்லது டாம்பான்கள் எது உபயோகித்தாலும், அவற்றை அடிக்கடி மாற்றுங்கள். குறிப்பாக அதிக உதிரப்போக்கு நாட்களில் கட்டாயம் மாற்ற வேண்டும். நாப்கீன்கள் ஒவ்வொரு 4 மணி நேரத்திலும், டாம்பான்கள் 4 முதல் 8 மணி நேரத்திலும் மாற்றப்பட வேண்டும். அவற்றை அடிக்கடி மாற்றும்போதுதான் கசியாமலும், அசௌகர்யமாக இல்லாமலும் இருக்கும்.

நல்ல சுகாதாரத்தை பழகுங்கள்

சோப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். உங்கள் சானிட்டரி பொருட்களை மாற்றுவதற்கு முன்பும், பின்னரும், இதை செய்வது தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

சௌகர்யமாக அணிந்துகொள்ளுங்கள்

உங்களின் டாம்பான்கள் அல்லது நாப்கீன்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நாப்கீன்களை உங்கள் உள்ளாடையின் மத்தியில் வைக்க வேண்டும். டாம்பான்கள் பெண்ணுறுப்பில் சரியாக பொருத்திக்கொள்ளவேண்டும். டாம்பான்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்தினால் அளவை மாற்றிக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்