Summer Foods for Toddler: கோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் இதோ!
வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடை காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய சத்தான உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

கோடை காலத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தரும் உணவானது அவர்களுக்கு சூட்டை ஏற்படுத்தாமல் இருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஏனென்றால் தவறான உணவுகள் குழந்தைகளின் வயிற்றுக்கு தொல்லை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும். எனவே அவர்கள் செரிமான ஆரோக்கியத்தை மனதில் வைத்து உடல் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும் உணவுகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வில்வ பழம்
மர ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த வில்வ பழம் உங்கள் குழந்தைகளின் கோடை கால உணவு பழக்கத்துக்கு இன்றியமையாமல் இடம்பெற வேண்டும். இவை பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, பி காம்பிளகஸ், தாதுக்கள், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளது. செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறந்த உணவாக வில்வ பழங்கள் உள்ளன. இதில் ஆன்டி பாக்டீரியா, ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதிலுள்ள மளமிளக்கி பண்புகள் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கிறது. இந்த பழங்களில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி, ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தயிர்
தயிர் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. அதிலுள்ல ப்ரோபையோடிக்ஸ் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் லேக்டோபேசில்லஸ் நிறைந்தது. ஒரு வகை பாக்டீரியாவான இது குடல் இறக்கத்தை சமநிலைப்படுத்துகிறது. அத்துடனம் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்கிறது. தயிரில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பரஸ், புரதம் ஆகியவை வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற உதவுகிறது. தயிரை பல வகைகளில் குழந்தைகளின் உணவுகளோடு சேர்த்து கொடுக்கலாம். ரைத்தா, லஸ்ஸி, மோர், தயிர் சாதம், பழங்கள் சேர்த்து கொடுக்கலாம்.