தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Mullangi Kurma.. Perfect Combination From Idli Dosa To Chapati

Mullangi Kurma: ஹெல்தியான முள்ளங்கி குருமா.. இட்லி தோசை முதல் சப்பாத்தி வரை சரியான காம்பினேஷன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 08, 2024 12:00 PM IST

முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் சிறுநீர்ப்பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் பீபி கட்டுக்குள் இருக்கும்.

முள்ளங்கி குருமா
முள்ளங்கி குருமா

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

முள்ளங்கி

கடலை பருப்பு

வெங்காயம்

தக்காளி

மிளகாய்

கறிவேப்பிலை

எண்ணெய்

கடுகு

உளுந்தம்பருப்பு

சீரகம்

இஞ்சி

பூண்டு

மிளகாய்தூள்

மஞ்சள் தூள்

மல்லி தூள்

தேங்காய்

கிராம்பு

பட்டை

அன்னாசி பூ

சோம்பு

உப்பு

கொத்தமல்லி

செய்முறை

முதலில் கால் கப் கடலை பருப்பை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு சூடான கடாயில் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம்பருப்பு சேர்க்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் கறிவேப்லையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது 100 கிராம் அளவு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவந்து வரும் போது அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பிறகு அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்க வேண்டும்.

முள்ளங்கி வதங்கிய பின் அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள். மற்றும் 2 ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்க வேண்டும். அதில் கால் மஞ்சள் ஸ்பூன் தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் விட்டு வேக விட வேண்டும்.

முள்ளங்கி பாதி வெந்த பிறகு அதில் வேக வைத்த கடலை பருப்பையும் சேர்க்க வேண்டும்.

இப்போது கால்கப் தேங்காய் ஒரு கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு அன்னாச்சி பூ, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதை முள்ளங்கியில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குருமா கெட்டியாக வரும்போது மல்லி இலையை தூவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான முள்ளங்கி குருமா ரெடி

முள்ளங்கியின் நன்மைகள்

முள்ளங்கியில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளது. முள்ளங்கி வாசம் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைக் கேட்டால் நிச்சயம் பிடிக்கும். முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் செரிமானம் மேம்படும்.

முள்ளங்கியை சாப்பிடுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் சிறுநீர்ப்பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் பீபி கட்டுக்குள் இருக்கும்.

முள்ளங்கிக்கு சுருங்கிப்போன காற்றுக்குழாய்களை விரிவடையும் திறன் உள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னைகள் தீரும். குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டால் சளி மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

முள்ளங்கி இதயநோய்களைப் போக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

முள்ளங்கியில் வைட்டமின் ஏ,சி,ஈ, கே உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு முள்ளங்கி நல்ல பலனைத் தரும்.

முள்ளங்கி சாறை தினமும் அருந்திவந்தால் அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தைப் பொலிவாக்கும். முகப்பருக்கள், அரிப்புகளைத் தடுக்கும்.

முள்ளங்கி பேஸ்ட்டை முகத்தில் பூசினால் நல்ல கிளென்சராகப் பயன்படும். இறந்த செல்களை நீக்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்