Healthy Habits : உங்கள் குழந்தைகளுக்கு தினமும் இதில் ஒரு கைப்பிடி கொடுத்தால் போதும்! உடல் சீராக வளர உதவும் பூஸ்ட்!
Healthy Habits : உங்கள் குழந்தைகள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய நட்ஸ்கள் மற்றும் விதைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் உணவுகளையும் அறிமுகப்படுத்துங்கள்.
நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானவை. அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதுமானது.
பாதாம்
இதில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. பாதாம் மூளை ஆரோக்கியத்துக்கு உதவியது. நோய் எதிர்ப்புக்கும் உதவியது. இதை நீங்கள் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் மற்றும் சாலட்களில் கலந்து சாப்பிட அது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
வால்நட்கள்
இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நினைவாற்றல் வளர்ச்சிக்க உதவுகிறது. வால்ட்நட்ஸை தானியங்களுடன் சேர்த்து அரைத்து ஸ்மூத்திகளாக பருகலாம்.
எள்
எள்ளு கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. இதில் இரும்புச்சத்தும் உள்ளது. இது குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. எள்ளை வறுத்து, சாலட்கள் மற்றும் வறுவல்களில் தூவி சாப்பிட சுவையும் அள்ளும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.
பரங்கிக்காய் விதைகள்
இதில் அதிகளவில் மெக்னீசியம், சிங்க் சத்துக்கள் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பரங்கி விதைகளை வறுத்து உப்பு சேர்த்து ஸ்னாக்ஸாக சாப்பிட சுவை அள்ளும். இதை பொடித்து சூப் மற்றும் சாலட்களில் தூவியும் சாப்பிடலாம்.
முந்திரி
மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அது உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. அது ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. முந்திரியை கிரீமியான சாசுடன் கலந்து சாப்பிடலாம் அல்லது வீடுகளில் தயாரிக்கும் ஸ்னாக்ஸ்களுடன் சேர்ந்து சாப்பிட சுவை அள்ளும்.
பிஸ்தா
இதில் புரதம் மற்றும் பொட்டாசிய சத்துக்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. தசைகளின் இயக்கத்துக்கு உதவுகிறது. பிஸ்தாவை தனியாகவே சுவைத்து மகிழலாம். இதை இனிப்புகள் மற்றும் பேக் செய்த உணவுகளில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
சியா விதைகள்
இதில் நார்ச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. இது செரிமானத்துக்கு உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. சியா விதைகளை பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்டலாம் அல்லது முளைகட்டிய தானியங்களுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஓட்சுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
சூரியகாந்தி விதைகள்
இதில் வைட்டமின் இ மற்றும் செலினியச்சத்துக்கள் உள்ளது. சூரிய காந்தி விதைகள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை புட்டிங்குகள் மற்றும் இனிப்புகளில் கலந்து சாப்பிட சுவை அள்ளும்.
ஆளிவிதைகள் அல்லது ஃப்ளாக்ஸ் விதைகள்
ஆளி விதைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. ப்ளாக்ஸ் விதைகள் செரிமானத்துக்கு உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. இதை பான் கேக்குகள், தயிர் மற்றும் ஸ்மூத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
ஹெம்ப் விதைகள்
ஹெம்ப் விதைகளில் புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் கிடையாது. இது தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதை தயிர், யோகர்ட்டில் கலந்து சாப்பிடலாம். அவகோடா டோஸ்டில் தூவியும் சாப்பிடலாம். ஸ்மூத்திகளில் கலந்து சாப்பிட கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
இந்த விதைகள் மற்றும் நட்ஸ்கள் கலந்த கலவையை தினமும் ஒரு கைப்பிடி கொடுத்தால் போதும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்