ஆரோக்கிய உணவுப்பழக்கம்: சீரான செரிமானத்துக்கு உணவுகளை சாப்பிடும் முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய உணவுப்பழக்கம்: சீரான செரிமானத்துக்கு உணவுகளை சாப்பிடும் முறை

ஆரோக்கிய உணவுப்பழக்கம்: சீரான செரிமானத்துக்கு உணவுகளை சாப்பிடும் முறை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 12, 2022 05:34 AM IST

உடல் ஆரோக்கியம் பெற ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகளை சாப்பிடுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவ முறையில் கூறப்படுகிறது.

<p>சீராக செரிமானம் நடைபெற ஆரோக்கிய உணவுபழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது</p>
<p>சீராக செரிமானம் நடைபெற ஆரோக்கிய உணவுபழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது</p>

நிஜத்தில் நாம் பசிக்கும்போதுதான் சாப்பிடுகிறோமா அல்லது உடலிலுள்ள கடிகாரத்தை பின்பற்றாமல் சுவர் கடிகாரத்தை பின்பற்றுகிறோமா? என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

ஆரோக்கியமான முறையில் உணவுகளை உட்கொள்ளவும், செரிமானம் சிறப்பாக அமையவும் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழிமுறைகள்:

1. பசி இருந்தால் மட்டும் உண்ணவும்:

நாம் அன்றாட பணிகளில் செலுத்தும் அதிகபட்ச கவனத்தினால் பசி தொடர்பாகவும், பசி உணர்வு தூண்டுதலையும் பெரிதாக கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். இதனால் நமக்கு வசதியான நேரத்தில் உணவு சாப்பிடும் முறையை பின்பற்றுகிறோம். ஆனால் இப்படிச் செய்வது உடலுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. 

பசி உணர்வு இருக்கும்போதே, அதாவது உங்களது முந்தைய உணவு நன்றாக செரிமானம் ஆகியவுடன் சாப்பிட வேண்டும்.

சில நேரங்களில் நாம் பசியுடன் இருப்பதாக நினைப்பதுண்டு. ஆனால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதாலும் இவ்வாறு ஏற்படலாம். எனவே கடிகார நேரத்தை பார்த்து சாப்பிடாமல் உங்கள் உடல் சொல்லும் நேரத்தை கண்காணித்து சாப்பிடவும்.

2. சாப்பிடும்போது டிவி பார்க்க வேண்டாம்:

சாப்பிடும்போது டிவி பார்ப்பதால் உங்கள் கவனம் அதன் மீதே இருப்பதால், உடல் உறுப்புகளில் வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் உணவு நிறைவாக இருப்பது குறித்த சமிக்ஞையை உடல் வெளிப்படுத்தாது. 

அதேபோல் மிக அமைதியாகவும், வசதியான இடத்திலும் அமர்ந்து சாப்பிட வேண்டும். எனவே சாப்பாடு மீதான கவனத்தை திசை திருப்பும் விதமாக டிவி, புத்தகம், போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

3. சரியான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்:

ஒவ்வொருவருக்கும் உணவு தேவைகளானது அவர்களின் வயிறு, வளர்சிதை மாற்றத்தின் வேகத்துக்கு தகுந்தார்போல் மாறுபடும். எனவே உங்களின் உடல் தேவையை புரிந்துகொண்டு, திருப்தி அடையும்வரை மட்டும் சாப்பிடுவது நல்லது.

4. சுடான உணவை உண்ணுங்கள்:

சுடான உணவை சாப்பிடுவதால் செரிமானம் சீராக அமையும். எனவே சமைத்த உடனே சாப்பிடும் உணவும் உடலுக்கு மட்டுமல்ல செரிமானத்துக்கும் உகந்ததாக உள்ளது. பிரிட்ஜில் இருக்கும் உணவுகளை எடுத்து சாப்பிடுவதை தவிர்ப்பது செரிமான சக்தியை வலுப்படுத்த உதவும். சுடான உணவுகள் செரிமான நொதிகள் சிறப்பாக பணி செய்ய உதவுகிறது.

5. தரமான உணவுகளை சாப்பிட வேண்டும்:

நீங்கள் சாப்பிடும் உணவு சாறு போலவும், கொஞ்சம் எண்ணெய் கலந்தும் இருக்க வேண்டும். இவ்வகை உணவுகள் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும், செரிமானத்தை சீராக வைக்கவும் உதவுகிறது. காய்ந்துபோன உணவுகளை தவிர்ப்பது நலம்.

6. ஒத்துவராத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்:

உடலுக்கு ஒத்துவராத உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் பிரச்னை ஏற்படும். எனவே உடலுக்கு ஒத்துவரவில்லை என்று உணர்ந்தால் அந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. சுவை உணர்வுகளை தூண்டுங்கள்:

உங்கள் உணவை நன்கு முகர்ந்து, கண்ணால் பார்த்து, அதன் சுவையை உணர்ந்து, நன்கு மென்று சாப்பிடுங்கள். ஐம்புலன்களையும் உணர்ந்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதாலே உடலுக்கு தேவையான சக்திகள் இயல்பாக கிடைப்பதோடு செரிமானமும் சீராகிறது. 

8. விரைவாக சாப்பிடக் கூடாது:

அவசர அவசரமாக சாப்பிடுதல் கண்டிப்பாக கூடாது. உங்கள் உணவை நன்கு மென்று சாப்பிடுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு சாப்பிடுங்கள். நன்கு மென்று சாப்பிடுவது சீரான செரிமானத்துக்கு அடிப்படையான விஷயமாக உள்ளது.

9. சரியான சுழற்சி முறையில் சாப்பிட வேண்டும்:

சரியான சுழற்சி முறையும், ஒழுங்கும் சாப்பாட்டில் மிக அத்தியாவசியம். எனவே அவற்றை கடைபிடிக்க உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.