தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Diet Eating These Foods Together Will Increase Your Health And Happiness In Your Body

Health Diet : இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது!

Priyadarshini R HT Tamil
Jan 23, 2024 04:44 PM IST

Healthy Diet : இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது!

Health Diet : இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது!
Health Diet : இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது!

ட்ரெண்டிங் செய்திகள்

முட்டையுடன் சாலட்

வேகவைத்த முட்டையுடன் சாலட் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், சில காய்கறிகளை சேர்த்து உண்ணும்போது அவை பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. முட்டையின் கொழுப்பு, காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகளை உறிஞ்ச உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்கள்தான் நம் உடலில் நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மஞ்சள் மற்றும் மிளகு

மஞ்சளில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதை கருப்பு மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மிளகில் உள்ள பைப்பரைன், மஞ்சளில் உள்ள குர்குமினை உடல் எளிதாக உறிஞ்ச உதவுகிறது. இவையிரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் எந்த உணவோ, பானமோ உங்கள் சுவையை மட்டும் கொடுக்கவில்லை, அழற்சிக்கு எதிராகவும் போராடுகிறது.

கீரை மற்றும் எலுமிச்சை

கீரைகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை எலுமிச்சையுடன் கலக்கும்போது, அதன் சுவை மட்டுஅதிகரிக்கவில்லை. கீரையில் உள்ள இரும்புச்சத்தை அது உறிஞ்சுவதற்கு அது உதவுகிறது. இந்த காம்போ, கீரைகளின் உச்சபட்ட ஊட்டச்சத்துக்களின் நன்மைகளை நீங்கள் பெறுவதை இது உறுதிப்படுத்துகிறது.

குயினோவா மற்றும் காய்கறிகள்

குயினோவா, புரதச்சத்து நிறைந்த ஒரு தானியம். இதை நீங்கள் வேக வைத்த அல்லது வறுத்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஒரு நல்ல உணவாகவும் உங்கள் வயிறை நிரப்புகிறது. குயினோவாவின் சுவையும், வறுத்த அல்லது வேக வைத்த காய்கறிகளுடன் சேர்ந்து உங்களுக்கு சுவை நிறைந்த ஒரு உணவையும் கொடுக்கிறது.

வாழைப்பழம் மற்றும் பாதாம் வெண்ணெய்

வாழைப்பழத்தில் டிரிப்டோஃபான் உள்ளது. அது உங்களின் மனநிலை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வகை அமினோ அமிலமாகும். அது செரோட்டினாக மாறி உங்களை குஷிப்படுத்துகிறது. பாதாம் வெண்ணெயில் மெக்னீசியச்சத்து நிறைந்துள்ளது. அது மன அழுத்தத்தை குறைத்து செரோட்டினின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தக்காளி மற்றும் அவகோடா

தக்காளி, லைக்கோபெனே நிறைந்தது. சூரியனில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. அது சில புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அவகோடாவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் இ, லைக்கோபெனேவை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. இது உங்கள் நாவுக்கு மட்டும் சுவையளிக்கவில்லை, உங்களின் சருமத்தை பாதுகாக்கிறது.

ஓட்ஸ் மற்றும் பெரிகள்

ஓட்ஸில் உள்ள எண்ணிலடங்கா கார்போட்ரேட்கள், உங்கள் உடலுக்கு சக்தியை வழங்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோ கெமிக்கல்கள் நிறைந்த பெரிகள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததை எதிர்த்து போராடுகிறது. அழற்சியை குறைக்கிறது. மனநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

டார்க் சாக்லேட் மற்றும் கிரீன் டீ

டார்க் சாக்லேட்டில், ஃப்ளேவனாய்ட்கள் அதிகம் உள்ளது. அது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நினைவாற்றலை பலப்படுத்துகிறது. அதை கிரீன் டியுடன் சேர்த்து பருகும்போது, மனதுக்கு அமைதியைகொடுக்கிறது. அதில் உள்ள கெஃபைன் மற்றும் எல்தியானைன், அமினோஅமிலங்கள் உங்களுக்கு எச்சரிக்கை உணர்வை கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்