Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!

Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Mar 01, 2024 01:04 PM IST

Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!

Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!
Health Tips : குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும் இந்த ஒரு பானம்! வாரத்தில் 2 நாள் பருக வேண்டும்!

முடி உதிர்வு, சருமம் தொடர்பான பிரச்னைகள், கருமை முகப்பரு, தழும்புகள் இவையனைத்தையும் மறையச்செய்யும்.

வயோதிகத்தால் ஏற்படக்கூடிய கண் பார்வை குறைபாடு, ஞாபக மறதி என இவையனைத்தையும் சரிசெய்யும்.

இதை நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் சருமம் பளபளக்க துவங்கும். செரிமான கோளாறுகள், அல்சர் பிரச்னைகள், குடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றுவது என அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – ஒரு கப்

இஞ்சி – ஒரு இன்ச்

எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்

வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – 2 ஸ்பூன்

செய்முறை

பீட்ரூட் கழுவி சுத்தம் செய்து, தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

(பீட்ரூட்டில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், செலினியம், சோடியம், வைட்டமின் சி உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்டை நாம் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். சருமம் கருமையாக இருந்தால், அதை தொடர்ந்து பருகும்போது, சருமம் இயற்கையாகவே வெளிர் நிறத்தில் இருக்கும். வெயிலில் அலைந்து திரிந்து வருவீர்கள் என்றால், சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய கருமையை அது சரிசெய்கிறது. நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. ரத்தம் மற்றும் குடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும்)

மிக்ஸி ஜாரில் பீட்ரூட் துண்டுகள், தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை என இனிப்பு சுவைக்கு எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரையை மட்டும் தவிர்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் சேர்க்கும்போதுதான், பீட்ரூடின் பச்சை வாசம் போகும். குடிக்கும்போது சுவையாக இருக்கும்.

அனைத்தையும் அரைத்து வடிகட்டி பருகவேண்டும். இதை ஃபிரஷ்ஷாகவும் பருகலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

அதிலிருந்து கிடைக்கும் சக்கையில் சிறிது சர்க்கரை சேர்த்து முகம் மற்றும் உடல் முழுவதும் நீங்கள் ஸ்கிரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளபளப்பாகும். இதை ஐஸ் க்யூப்களாக்கி வைத்துக்கொள்ளலாம். எப்போது தேவைப்படுமோ எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பலன்கள்

கொழுப்பு கிடையாது. கலோரிகள் குறைவு. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும். ஆனால் உடல் இளைக்காது. உடலில், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கும். புது ரத்தம் உடலில் ஊறு துவங்கும். மலம் இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். அதுகுறித்து அச்சம்கொள்ள வேண்டாம்.

கல்லீரல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். கல்லீரலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதுப்பிக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். அல்சர் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இதை குடித்து வந்தால், அல்சர் குணமாகும். செரிமானம் தொடர் பிரச்னைகள் குணமாகும்.

முதுமையை தள்ளிப்போட வேண்டுமென்றால் இதை கட்டாயம் எடுக்க வேண்டும். மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வயோதிக காலத்தில் ஏற்படக்கூடிய மறதி நோயை சரிசெய்யும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல உதவும்.

உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணமான நச்சுக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் எவ்வித நோய்களும் ஏற்படாது. சருமம் பளபளக்கும். தொடர்ந்து குடித்து வர நல்ல பலன்கள் தரும்.

வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிறுநீரகத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.