Health Tips : இரவு உறங்கச்செல்லும் இந்த ஒரு பானம் எடுத்தால் போதும்! வாழ்க்கையில் மலச்சிக்கலே வராது!
Health Tips : இரவு உறங்கச்செல்லும் இந்த ஒரு பொருளை எடுத்தால் போதும்! உடலுக்கு 100 நன்மைகளை தரும்!
இரவு உறங்கச்செல்லும் முன் சிறு துண்டு வெல்லம் சாப்பிடவேண்டும். இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
மூட்டு வலி, கை-கால் குடைச்சல், பாத வலி, பாத எரிச்சல், உடல் சோர்வு, ஞாபக மறதி, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், ரத்தசோகை, சரும பிரச்னைகள், அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
வெல்லம், கரும்பில் இருந்து கிடைக்கும் ஒரு பொருள். இந்த வெல்லம் வெளிர் முதல் அடர் பழுப்பு நிறம் வரை இருக்கும். எந்தளவுக்கு அடர் பழுப்பு நிறமாக உள்ளதோ அந்தளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெள்ளை சர்க்கரையின் நிறத்தை போக்குவதற்கு சில வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் நீக்கப்படுகிறது. அதனால்தான் கரும்பில் இருந்து கிடைக்கும் இரண்டிலும் வெல்லம் சிறந்தது.
வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், சோடியம். பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் ஏற்படும் ஆஸ்துமா, சளித்தொல்லைகளையும் போக்கக்கூடிய மருந்து இந்த வெல்லம். இதை குளிர்காலத்தில் ஒரு துண்டு எடுத்துக்கொண்டால் அந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வெல்லம் – ஒரு துண்டு
தண்ணீர் – ஒரு டம்ளர் (சூடானது)
ஏலக்காய் – 1
செய்முறை
ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து, மூடி வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி பருகலாம். இதில் தேவைப்பட்டால் சுக்குப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
இதை இரவில் உறங்கச்செல்லும் முன் பருகிவிட்டு படுத்தால், காலையில் எழும்போது உங்கள் உடல், நரம்பு, மூளை என அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இது மலச்சிக்கலை போக்கும். குடல் புழுக்களை வெளியேற்றும். இரும்புச்சத்து மற்றும் கால்சியச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு பெண்கள் அவதிப்படுகிறார்கள். இது ரத்த சோகை நோயை குணப்படுத்தும். புது ரத்தத்தை உடலில் ஊறச்செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை நன்றாக சுறுசுறுப்பாக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைக்கும். அஜீரண கோளாறு, செரிமான கோளாறு என அனைத்தையும் சரிசெய்யும். இதனால் உடலில் உள்ள வலிகள் நீங்கும். உடல் பருமன், வயிறு உப்புசம் என அனைத்துக்கும் தீர்வாகும். உடல் சோர்வு, உடல் வலி, கை-கால் வலி என அனைத்துக்கும் தீர்வாகும்.
இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், இதில் 2 துளசி இலைகளை மட்டும் சேர்த்துவிட்டு, வெல்லத்தின் அளவை குறைத்து எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை ஏறாது. அவர்கள் வாரத்தில் இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம்.
வெல்லத்தில் உள்ள உட்பொருட்கள், நமது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கும். நமது உடல்லி உள்ள நச்சுக்களை நீக்கினாலே நமது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்கள். தண்ணீருக்கு பதில் பாலில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆழ்ந்த உறக்கம் வரும். காலையில் எழுந்திருக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும்.
இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதனால் சளித்தொல்லை மற்றும் அழற்சி நீங்கள். வாதம் பிரச்னைகள் இருக்காது. பித்த பிரச்னைகளையும் சரிசெய்யும். உடலில் உள்ள அனீமியாவை குணப்படுத்தும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல் சோர்ந்து காணப்படுவார்கள். அதிக டென்சன், படபடப்பு ஆகியவை இருக்கும்.
அதுபோன்ற நேரங்களில் இதை சாப்பிட்டால், இந்த பிரச்னைகளை அவை குணமாகும். இது உடல்லி செரிமான திரவங்களை தூண்டுவிட்டு, அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். இதில் அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளது. நமது உணவுக்குழாய், வயிறு, குடல் என அனைத்தையும் சுத்தம் செய்யும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.
இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்