Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!

Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!

Priyadarshini R HT Tamil
Feb 24, 2024 04:47 PM IST

Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!

Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!
Health Tips : தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா? அப்போ இதுதான் காரணம்! கவனம் தேவை!

உறக்கம் தொலைவதால்

நீங்கள் சரியாக உறங்கவில்லை; உறக்கம் தொலைத்தீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இது ஒரு பழமொழியாகவே உள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் போதிய அளவு உறங்கவேண்டும். தினமும் 7 மணி நேர உறக்கம் காட்டாயம். அத இல்லாத பட்சத்தில் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகத்தான் உணர்வீர்கள். எனவே நல்ல ஆழ்ந்த 7 மணி நேர உறக்கத்துக்குப்பின்னர், நீங்கள் உற்சாகமாக எழுந்து வாருங்கள்.

அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு

இரும்பு, வைட்டமின் பி12, டி உள்ளிட்ட உங்கள் உடலுக்கு தேவையான அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால் நீங்கள் சோர்வடைந்துவிடுவீர்கள். இதனால் உங்களை சோம்பேறித்தனமும் தொற்றிக்கொள்ளும். சோர்வாக உள்ளது என்று எப்போதும் உறங்கிக்கொண்டே இருப்பீர்கள். எனவே மருத்துவ பரிசோதனைகளை கட்டாயம் எடுத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் உங்கள் உணவுத்திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். எனவே போதிய ஊட்டச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் வாழ்வின் ஒரு பகுதி, அது நீண்ட நாட்களாக தொடரும்போது, அதை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் வாழ்வில் ஒரு சூறாவளியையே ஏற்படுத்திவிடும். இது உங்கள் மனநிலையை மட்டும் பாதிக்காது. உங்கள் உடலின் சக்தியையும் இது போக்கிவிடும். இது உங்கள் வாழ்வையே புரட்டிபோட்டுவிடும். இதனால் உங்கள் உடல் சோர்வடையும். எனவே கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

உடல் உபாதைகள்

சில நேரங்களில், உடலில் சோர்வு ஏற்படுவது உங்கள் உடல் நலக்கோளாறுகளாலும் இருக்கலாம். ஆனால், மனஅழுத்தம், அனீமியா, தைராய்ட் போன்ற பிரச்னைகளின்போது உங்கள் உடலில் உள்ள சத்துக்கள் முற்றிலும் வற்றி உங்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. எனவே உங்கள் உடலில் சந்தேகப்படும்படி ஏதேனும் நடைபெற்றால், உடனடியாக மருத்துவரை அணுக மறக்காதீர்கள்.

மருந்துகள்

நீங்கள் உங்கள் உடல் உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் உங்கள் உடல்லி சோர்வு ஏற்படலாம். எனவே நீங்கள் புதிதாக ஒரு மருந்து எடுத்துக்கொள்ள துவங்கும்போது, உங்களுக்கு முன்பிருந்ததை விட அதிக சோர்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. எனவே மாற்று விஷயங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

தண்ணீர் பற்றாக்குறை

தண்ணீர் அனைவரும் விரும்பி பருகும் பானமல்ல. ஆனால், அனைவருக்கும் அத்யாவசியமான ஒரு பானம். எனவே தண்ணீர் தேவையான அளவு தண்ணீர் பருகுவது உங்கள் உடலுக்கு நல்லது. உடல் போதிய நீர்ச்சத்துடன் இருந்தால்தான், உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும். சிறிதளவு நீர்ச்சத்து குறைந்தால் கூட உங்களுக்கு சோர்வு ஏற்படும். எனவே தண்ணீர் தேவையான அளவு கட்டாயம் பருகுங்கள். உங்கள் உடலில் சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உணவு

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் உங்கள் ஆளுமை. நீங்கள் வெறும் துரித உணவுகளும், ஜங்க் உணவுகளும் அதிகம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் இழந்துவிடும். அதனால் சோர்வு ஏற்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை உணவுகள், காஃபைன் உணவுகள் உங்கள் உடலுக்கு ஆற்றலை அப்போது கொடுத்தாலும், அது நீண்ட நாளைக்கு உதவாது. எனவே இவற்றை தவிர்த்தல் நலம். எனவே உடலுக்கு சத்துக்களை அளிக்கும் ஆரோக்கிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிகளை தவிர்ப்பது

நீங்கள் உடற்பயிற்சிகளை தவிர்த்தீர்கள் என்றால், அது உங்களை மேலும் சோர்வாக்கி, சோம்பேறியாகவும் மாற்றிவிடும். எனவே ஏதேனும் உடற்பயிற்சிகளை வழக்கமாக்குங்கள். உடற்பயிற்சிகள் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றன. எனவே அவற்றை செய்ய மறக்காதீர்கள் அல்லது தவிர்க்காதீர்கள். அவை உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறத. உங்கள் தசைகளுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

வேலைப்பளு

பல ஷிப்களில் நீங்கள் மாற்றி மாற்றி வேலை செய்யும்போது அது உங்கள் உடலை சோர்வடையச் செய்கிறது. ஏனெனில் நீங்கள் மாற்றி மாற்றி வேலை செய்யும்போது, நீங்கள் உறங்கும் நேரம் பாதிக்கப்படுகிறது. இதனால், உங்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. முறையற்ற உறக்கப்பழக்கமும், உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஒரு வழக்கமான உறக்க பழக்கத்தை பின்பற்றுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது. எனவே இவற்றில் உங்கள் உடலுக்கு எது சோர்வு ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, அதை முறைப்படுத்தினாலே உங்கள் உடலுக்கு சோர்வு ஏற்படாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.