தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, முடி உதிர்வைத் தடுக்கும் லெமன் கிராஸ்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, முடி உதிர்வைத் தடுக்கும் லெமன் கிராஸ்

தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, முடி உதிர்வைத் தடுக்கும் லெமன் கிராஸ்

I Jayachandran HT Tamil
Feb 25, 2023 10:12 PM IST

தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைக்கும் லெமன் கிராஸ் புல்லின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

லெமன் கிராஸ்
லெமன் கிராஸ்

இந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது!

வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில் “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மருத்துவ பயன்க‌ள்:

லெமன் க்ராஸ் நல்ல செரிமாத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும், தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது.

இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உடல் எடையை குறைக்க மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீ தொடர்ந்து குடித்து வருவது நல்ல பலன் தரும்.

லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே போதும். இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ் டீ பேருதவியாக இருக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.

உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதுடன் மாதவிடாய் வலியைக் குறைகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.