தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Happy Hormones Ways To Make Your Body Secrete Happy Hormones

Happy Hormones : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள்!

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 05:23 PM IST

Happy Hormones : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள்!

Happy Hormones : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள்!
Happy Hormones : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இயற்கை வேதிப்பொருட்கள், உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். இந்த மகிழ்ச்சி ஹார்மோன்கள் உங்கள் உடலில் சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அன்றாடம் நீங்கள் செய்யும் சிறிய நடவடிக்கைகளின் மூலமே அவற்றை நீங்கள் செய்ய முடியும்.

டோபமைன் – பாராட்டும் வேதிப்பொருள்

உங்களின் மூளை குட் ஜாப் அதாவது நல்ல வேலை என்று கூறுவதை போன்றது டோப்பமைன், இது நீங்கள் ஒரு இலக்கை எட்டிப்பிடிக்கும்போது சுரக்கிறது. ஒரு விஷயத்தை செய்து முடிக்கும்போது அல்லது உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது ஏற்படுகிறது. 

எனவே சிறு வெற்றிகளைக் கூட கொண்டாடுங்கள். அது நீங்கள் ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடித்ததாக இருக்கட்டும் அல்லது ஒரு நல்ல உணவை சாப்பிட்டதாக இருக்கட்டும்.

எண்டோர்ஃபின்ஸ் – வலி நிவாரணி ஹார்மோன்

எண்டோர்ஃபின்ஸ் இயற்கை வலி நிவாரணிகள் மற்றும் இதை நீங்கள் பல்வேறு வகை நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் செய்ய முடியும். வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வது, உங்களுக்கு விருப்பமான பாட்டுக்கு நடனமாடுவது, காமெடி படத்தை பார்ப்பது, உங்கள் நண்பர்களுடன் மனமார்ந்த புன்னகையை பரிமாறிக்கொள்வது என அனைத்தும் செய்யும்போது இதில் ஏற்படும்.

ஆக்ஸ்டோசின் – காதல் ஹார்மோன்

ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. ஆக்ஸிடோசின், சமூக தொடர்புகளை ஊக்குவிக்கிறது. உடலை தொடும்போது ஏற்படுகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு தரமான நேரத்தை செலவிடுங்கள், அவர்களை கட்டிப்பிடியுங்கள், உங்கள் நாயை அணைத்துக்கொள்ளுங்கள், தேவை உள்ளவர்களுக்கு உதவுங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் செய்யும்போது, அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

செரோட்டினின் – மனநிலையை சமநிலையாக்கும்

உங்கள் மனநிலையை சமநிலையில் வைப்பதற்கு இந்த செரோட்டினின் உதவும். அது மகிழ்ச்சி உணர்வையும், உடல் நலனையும் அதிகரிக்கச் செய்கிறது. சூரிய ஒளியில் மூழ்கியெழுந்தால் உங்கள் உடலில் செரோட்டினின் அளவு அதிகரிக்கும். 

இயற்கையுடன் இயையும்போதும் உங்கள் உடலில் செரோட்டினின் அளவு அதிகரிக்கிறது. எனவே தியானம், மனதை ஒருமுகப்படுத்தல் என்று செய்யும்போது, அது உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்துகிறது.

தொடர்ந்து நகருங்கள்

உங்கள் உடலுக்கு உடல் செய்யும் எவ்வித பயிற்சிகளும் உங்கள் உடலுக்கு மட்டும் நன்மையளிப்பதில்லை. உங்கள் மனதுக்கும் நன்மை கொடுக்கிறது. உடற்பயிற்சியின்போது எண்டோர்ஃபில்ஸ், டோபமைன்கள், செரோட்டினின் ஆகியவை சுரக்கிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சி மனநிலை ஏற்பட வாய்ப்பு கொடுக்கிறது. 

ஒரு வேக நடை அல்லது யோகா அல்லது நடனம் அல்லது ஏதேனும் உடற்பயிற்சி என எதுவாக இருப்பினும் உங்கள் உடலுக்கு ஆற்றலைக்கொடுக்கிறது. அது உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் மகிழ்ச்சியாக்குகிறது. எனவே உங்கள் வாழ்வில் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு பரிசு கொடுங்கள்

உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது, உங்களுக்கு பிடித்த படத்தை பார்ப்பது அல்லது உங்களுக்காக மசாஜ் எடுத்துக்கொள்வது என உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

மற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள்

மனிதர்கள் சமூக உயிரினங்கள், நமது உடல் நலனுக்கு அர்த்தமுள்ள தொடர்புகள் தேவை. எனவே நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். 

அது உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் செலவிடுவது அல்லது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுடன் நேரம் செலவிடுவது என இருக்கட்டும்.

நன்றி பழகுங்கள்

நன்றி உணர்வுடன் இருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் உங்களுக்கு கிடைத்த நேர்மறையான விஷயங்களை பாருங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள். 

ஒவ்வொரு நாளும் நேரம் எடுத்து நீங்கள் எதற்கெல்லாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று பாருங்கள். அழகிய சூரியன் மறையும் காட்சியோ அல்லது ஒரு நண்பனின் புன்னகையோ அந்த நேரத்தில் உங்களை மகிழ்வித்த ஒன்றுக்கு நன்றி கூறுங்கள் அல்லது இந்த வாழ்க்கைக்கே நன்றி கூறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்