Green Chutney : பசுமையான பச்சை சட்னி; இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்துக்கும் ஏற்றது!
Green Chutney : பசுமையான பச்சை சட்னி; இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்துக்கும் ஏற்றது!
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு சின்ன துண்டு
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – கால் கப்
புளி – சிறிதளவு
புதினா – ஒரு கைப்பிடி
மல்லித்தழை – 2 கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும், அதில் உளுந்தை சிவக்க வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அது வதங்கியதும், தேங்காய், புளி, மல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பசுமையான பச்சை சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
புதினாவின் நன்மைகள்
புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெயை தலைவலிக்கு பயன்படுத்தினால் தலைவலி நீங்கும்.
புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கொஞ்சம் தேன் சேர்த்து பருகலாம்.
அது வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப்போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை சரிசெய்யும்.
வாய்க்கு நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. இரண்டு புதினா இலைகளை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வீசாது.
ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது.
புதினாவை தண்ணீர் விடாமல் அரைத்து வெளிப்புறத்தில் பற்றுபோட்டால், அது தசை வலி, நரம்பு வலி, தலைவலி போன்றவற்றை சரிசெய்கிறது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்கு புதினா மருந்தாகப்பயன்படுகிறது.
மல்லித்தழையின் நன்மைகள்
கண் பார்வை மேம்பட மல்லித்தழை உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது கண் பார்வைக்கு உதவுகிறது. மேலும் இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
மல்லித்தழையின் பசுமை நிறத்துக்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காரணமாகின்றன. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துக்கிறது.
உடலில் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் பருமனை தடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது.
செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு, குமட்டல் போன்ற அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த மல்லி மற்றும் புதினா தலைகளை நாம் வெறும் வாசத்துக்காக மட்டும் பயன்படுத்தக்கூடாது. அவற்றை இதுபோல் சட்னியாக செய்து சாப்பிட்டால் அவற்றின் பலன்களை முழுமையாகப்பெறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்