Girl Baby Names : அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய உருது பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்!
Girl Baby Names : அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய உருது பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டுங்கள். அவர்களின் வாழ்வு சிறக்கும்.
உங்களின் அழகிய பெண் குழந்தைகளுக்கு உருது மொழியில் பெயர் வைக்கவேண்டுமா? இதோ சில உருது மொழிப்பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து நீங்கள் உங்கள் பெண் குழந்தைகளுக்கு தேவையான பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அழகிய பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்கள். இதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. தனித்தன்மையான பெயர்கள் மற்றும் கவித்துவமான பெயர்கள், சிறப்பான அர்த்தம் கொண்ட பெயர்கள் என கலாச்சார முக்கியத்துவம் கொண்ட பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வைக்க டிரன்டியான மற்றும் ஆழ்ந்த கலாச்சார தனித்துவம் கொண்ட மற்றும் ஆன்மவைத்தொடும் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டுங்கள் அவர்களின் வாழ்வு வளமாகும். உருது மொழியில் உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை தேர்ந்தெடுங்கள்.
மைரா
மைரா என்றால் அன்பான, பிடித்த, நிலவைப்போன்ற என்று பொருள். இந்தப்பெயர் அன்பானவர்களுக்கு வைக்கப்படும் பெயர். இந்தப்பெயர் நேர்மறை எண்ணங்களைத் தரும். மைரா என்றால் அன்பான குழந்தை. அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர் என்ற பொருள்.
அலீனா
அலீனா என்றால், சொர்க்கத்தின் பட்டு, மிருதுவான, மென்மையான, புனிதமான என்று பொருள். அலீனா என்ற பெயர் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கும் முக்கியமான பெயராக உள்ளது. இந்தப்பெயர் நளினம், வானியல் வசீகரம் என்று பொருள். இவையனைத்தும் கலந்த அந்த கலவைதான் இந்தப்பெயர்.
இனாயா
இனாயா என்றால் அனுதாபம், அக்கறை, ஆறுதல் என்று அர்த்தம். இந்தப்பெயருக்கு ஆன்மீக தொடர்பு கொண்டது. இனாயா என்றால் இரக்கம், அனுதாபம் என்பதை குறிக்கிறது. ஒவ்வொரு பெற்றோரின் நம்பிக்கை. அவர்கள் குழந்தைக்கு நம்பிக்கையை விதைக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இந்த பெயரை அவர்களுக்கு வைக்கலாம்.
நயாப்
நயாப் என்றால் அரிதான, தனித்தன்மையான, மதிப்புமிக்க என்ற பொருள். நயாப் என்றால், அழகான பெயர் என்று பொருள். இது அரிதான, தனித்தன்மையான குழந்தை என்பதை குறிக்கும். அந்தக் குழந்தை இந்த குடும்பத்துக்கு எத்தனை விலைமதிப்பற்றது என்பதை குறிக்கிறது.
மஹிரா
மஹிரா என்றால், திறமையான, திறன்கள் கொண்ட, சக்தி வாய்ந்த என்று பொருள். இந்தப்பெயர், அறிவான என்பதைக் குறிக்கிறது. திறமையுள்ள என்பதையும் மஹிரா என்ற பெயர் உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைத்தாலே அந்தக் குழந்தை வலுவான மற்றும் அனைத்தையும் செய்யக்கூடியவராக இருப்பார்.
ஈஷால்
ஈஷால் என்றால், சொர்க்கத்தின் மல் என்று பொருள். மணம் வீசுபவர். ஈஷால் என்றால், கருணைமிக்கவர் என்று பொருள். இந்தப்பெயர் அழகு, மணம் இரண்டையும் குறிக்கிறது. இது சொர்க்கத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மலர் என்று பொருள். இது உங்கள் வீட்டுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்த குழந்தைக்கு ஏற்ற பெயர்.
ஐய்சா
ஐய்சா என்றால், மரியாதையான, அழகான, உன்னதமான என்று பொருள். இந்தப் பெயர் மரியாதை மற்றும் கருணையைக் குறிக்கிறது. ஐய்சா என்றால், கண்ணியமும், மரியாதையும் கொண்டவர் என்பதை குறிக்கும் பெயர்.
யம்னா
யம்னா என்றால் அதிர்ஷ்டம், ஆசிர்வதிக்கப்பட்டவர், மங்களகரமான என்று பொருள். யம்னா என்றால் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர் என்று பொருள். இந்தப் பெயர் உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயராகும். உங்கள் குடும்பத்திற்கு எண்ணற்ற ஆசிர்வாதங்களைக் கொண்டுவருபவர் என்று பொருள்.
அரிசா
அரிசா என்றால் சிம்மாசனம், உயர்ந்த, மதிப்புக்குரிய நபர் என்று பொருள். அரிசா என்றால் கண்ணியமான மற்றும் உயர்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இந்தப் பெயர் வலுவான மற்றும் உன்னதமான பெண்களுக்கு வைக்கப்படும் பெயர் என்று பொருள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்