Ghee Rice : நித்தம் நித்தம் நெய் சோறு சாப்பிட தூண்டும் இப்படி ஒரு நெய் சோறு செய்தால், இதோ ரெசிபி!
Ghee Rice : நித்தம் நித்தம் நெய் சோறு சாப்பிட தூண்டும் இப்படி ஒரு நெய் சோறு செய்தால், இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பட்டை – 2
அன்னாசி பூ – 2
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 2
கிராம்பு – 6
ஜாவித்ரி – 1
வெங்காயம் – 2 (மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 கீறியது
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
(தட்டி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
உப்பு – 1 ஸ்பூன்
தண்ணீர் – ஒன்னே முக்கால் கப்
முந்திரி பருப்பு – 10
திராட்சை – 20
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
இஞ்சி-பூண்டு ஒன்றாக போட்டு தட்டவேண்டும் அல்லது விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் நெய் ஊற்றவேண்டும்.
இதில் பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்த அரிசியை சேர்க்கவேண்டும்.
மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூட வேண்டும்.
ஆவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும் அல்லது உங்களுக்கு தேவையான அளவு நேரம் அல்லது வழக்கமாக அளவு நேரம் விட்டு இறக்க வேண்டும்.
முந்திரி பருப்பு, திராட்சையை தனியாக கடாயில் முந்திரி சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பிரஷர் போன பின், குக்கர்ரை திறந்து அதன்மேல் அதன் மேல் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவேண்டும். கொத்தமல்லித்தழைகளையும் சிறிது தூவலாம்.
நெய் சோறு சாப்பிட தயாராக உள்ளது. இதனுடன் தாளிச்சா, பன்னீர், காலிஃப்ளவர், காளான், அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்த குருமா என அனைத்தும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
சாதாரண ஊறுகாய் கூட இதற்கு நல்ல காம்போதான், சிக்கன், மட்டன் குழம்புகளும், தொக்குகளும் சேர்த்து சாப்பிடலாம்.
வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட விரும்பும் உணவாக இந்த நெய்சோறு இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்