தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Gravy : அடிச்சுக்கவே முடியாத அதகள சுவையில் பூண்டு-மிளகு குழம்பு! காய்கள் சேர்த்தும் செய்யலாம்!

Garlic Gravy : அடிச்சுக்கவே முடியாத அதகள சுவையில் பூண்டு-மிளகு குழம்பு! காய்கள் சேர்த்தும் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 19, 2023 11:13 AM IST

Garlic Gravy : பூண்டு, மிளகு புளிக்குழம்பு அல்லது பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி?

Garlic Gravy : அடிச்சுக்கவே முடியாத அதகள சுவையில் பூண்டு-மிளகு குழம்பு! காய்கள் சேர்த்தும் செய்யலாம்!
Garlic Gravy : அடிச்சுக்கவே முடியாத அதகள சுவையில் பூண்டு-மிளகு குழம்பு! காய்கள் சேர்த்தும் செய்யலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தாளிக்க

வரமிளகாய் - 4,

உளுத்தம் பருப்பு அல்லது மல்லி – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பூண்டு - 15 பற்கள் 

செய்முறை

கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்த்து, மிளகோடு, கடுகு தவிர மற்ற தாளிக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

இவை நன்றாக ஆறியபின், மிக்ஸியில் சேர்த்து, புளியையும் அப்படியே சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு அனைத்தையும் மைபோல அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள் தேவையான உப்பு போட்டு நன்றாக கலந்துவிடவேண்டும்.

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்தில் வரும்போது, இறக்க வேண்டும்.

ருசியான மற்றும் மணக்கும் மிளகுக் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் மட்டுமே பிசைந்து சாப்பிடவேண்டும்.

அப்பள வகைகள், வடகங்கள், காரமில்லாத கூட்டு, பொரியல், அவியல் போன்றவை இதற்கு தொட்டுக்கொள்ள மிக அருமையாக இருக்கும்.

மிளகு பூண்டுக் குழம்பு - குழம்பு பாதி கொதி வரும்போது 15 பூண்டு பற்களை தனியாக எண்ணெயில் வதக்கி சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு சமைத்தால் மிளகு பூண்டு குழம்பு.

பூண்டுக்கு பதில் கத்திரிக்காய் அல்லது முருங்கையும் வதக்கி இதில் சேர்த்தால் மிளகு கத்திரி அல்லது முருங்கைக் குழம்பு

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்