Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!-garden is there no space to plant a garden if there is enough space to put a tank wealth will flourish by growing - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!

Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 29, 2024 09:34 AM IST

Garden : வீட்டில் செடிகள் வளர்ப்பதால் நம் வீடு அழகாக மாறுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. நம்மை சுற்றி அமைதியான சூழலை உருவாக்குகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் நமது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!
Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!

வீட்டில் செடிகள் வளர்ப்பதால் நம் வீடு அழகாக மாறுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. நம்மை சுற்றி அமைதியான சூழலை உருவாக்குகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் நமது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. பலரும் வீட்டில் தோட்டம் வைக்க விரும்பினாலும் இடம் இருப்பது இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் சிறிய தொட்டிகைளை வைக்க இடம் இருந்தாலோ இந்த செடிகளை ஈஷியாக வளர்க்கலாம்.

குறிப்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சில செடிகளை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அப்படி நமக்கு அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் அள்ளித்தரும் சில செடிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

துளசி

இந்திய பாரம்பரியத்தில் துளசி செடி மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மூலிகை செடியான துளசியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. துளசி செடிக்கு நீர் ஊற்றி பராமரிப்பது நமக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வீட்டில் துளசி வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அது மட்டும் இல்லாமல் துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. சளி இருமல் உள்ளிட்ட பல உடல் பிரச்சனைகளை தீர்க்க துளசி பயன்படுத்தப்படுகிறது.

ஜேட் செடி

பொதுவாக வீடுகளில் ஜேட் செடி வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல் பரவும். எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. இது நம் வீட்டிற்குள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. ஜேட் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் குடும்பத்தில் அமைதியும், இனிமையான சூழ்நிலையும் ஏற்படும். வட்டமான பளபளப்பான இலைகள் கொண்ட இந்த செடியை பார்க்கும் போதே கண்களைக் கவரும். இது மிகவும் அழகாகவும் காட்சி அளிக்கும்.

மூங்கில் செடி

சிறிய மூங்கில் செடிகளை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இந்த செடியை உங்கள் வீட்டின் டிராயிங் ரூம், அல்லது படுக்கை அறையிலும் வைக்கலாம். இதனால் உங்கள் குடும்ப உறவுகள் மேம்படும் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து படி மங்களகரமான தாவரங்களில் ஒன்றாக மூங்கில் செடி பார்க்கப்படுகிறது. இது பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது.

மணி பிளாண்ட்

குழந்தைகள் கூட எளிதாக வளர்க்க கூடிய தாவரம் மணி பிளாண்ட். இதற்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படுவது இல்லை. வீட்டில் நீங்கள் விரும்பிய இடத்தில் ஒரு சிறிய தொட்டியில் வைத்தோ அல்லது பாட்டிலில் வைத்தோ எளிதாக வளர்க்கலாம். இது நமக்கு மனதில் நேர்மறையான எண்ணங்களை தூண்ட உதவும். மேலும் மணி பிளாண்ட் வளர்ப்பதால் வீட்டில் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாம்பு செடி

ஸ்னேக் பிளாண்ட் என்று அழைக்கப்படும் பாம்பு செடியை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதற்கு மிகக் குறைந்த சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது. அதிக அளவு நீர்ச்சத்தும் தேவை இல்லை. இதனால் எப்போதும் பிஸியாக இருக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் வளர்க்க மிகவும் ஏதுவானது இந்த பாம்பு செடி. இது காற்றை சுத்திகரிக்க பெரிதும் உதவும்.

இப்படி வீட்டில் சிறிய தோட்டம் வைக்க இடம் இல்லை என்ற கவலையை விடுத்து நம்மால் இயன்ற வகையில் இந்த செடிகளை வளர்த்து மகிழ்ச்சியை பெறலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.