பிரியாணி முதல் கிரேவி வரை உணவுகள் அனைத்தும் ருசிக்கவேண்டுமா? இதோ கரம் மசாலா ரெசிபி!
பிரியாணி முதல் கிரேவி வரை நீங்கள் சமைக்கும் உணவுகள் அனைத்தும் ருசிக்கவேண்டுமா? இதோ கரம் மசாலா ரெசிபியை நீங்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.
பிரியாணி, இது தெற்காசியாவின் புகழ்பெற்ற உணவாகும். தற்போது கணக்கெடுப்பு நடத்தினாலும் பிரியாணி பிடிக்காதவர்களே நாட்டில் இல்லை எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்தளவுக்கு பிரபலமான உணவு. பிரியாணியை கறி, மீன், சிக்கன், பன்றிக்கறி, இறால் என அனைத்து வகைகளிலும் செய்யலாம். அதுவே சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், காய்கறிகள், காளான், முட்டை என வகைகள் உள்ளது. இது மட்டுமின்றி பச்சை பட்டாணி, டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், சோயாவைப் பயன்படுத்தியும் பிரியாணி தயாரிக்க முடியும். பீட்ரூட் பிரியாணி, உருளைக்கிழங்கு பிரியாணியுடம் செய்யலாம். எனவே பிரியாணி சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் அசைவம் அல்லது சைவம் என இரண்டு வகைகளிலும் செய்து சாப்பிடலாம். தெற்காசியாவின் மிக பிரபலமான உணவான பிரியாணி உள்ளது. இது முஸ்லிம்களுடன் தொடர்புடைய உணவாக இருப்பதால், பாய் வீட்டு பிரியாணிக்கு மவுசு அதிகம். இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி அதிகம் இடம்பெறுகிறது.
பிரியாணிக்கு என்றே குறிப்பிட்ட சில கடைகளும் உள்ளன. அதில் பிரியாணி சாப்பிட மக்கள் கூட்டமும் அலைமோதும். இவைகளால் இந்தியாவின் பிரபல உணவாக பிரியாணி உள்ளது. இந்த பிரியாணியின் சுவையை அதிகரிப்பதே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். பிரியாணி முதல் கிரேவி வரை உங்கள் உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும் கரம் மசாலாவைச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கரம் மசாலா பொடி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
வர மல்லி – ஒன்றரை ஸ்பூன்
சோம்பு – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 10
மிளகு – ஒரு ஸ்பூன்
பட்டை – 2
பிரியாணி இலை – 2
ஜாவித்திரி – 3
கிராம்பு – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் – 5
ஸ்டார் சோம்பு – 8
ஜாதிக்காய் – 1
கருப்பு ஏலக்காய் – 3
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயை சூடாக்கி அதில் வரமல்லியை சேர்த்து நன்றாக வாசம் வரும் சரை வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து சோம்பு, சீரகத்தை ஒன்றாக சேர்த்து வறுக்கவேண்டும். மிளகை சேர்த்து அது சூடேறும் வரை வறுக்கவேண்டும். அடுத்து வர மிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்திரி, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை என இவற்றை ஒன்றாக சேர்த்து வறுக்கவேண்டும். கடைசியாக ஜாதிக்காய் மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.
வறுத்த இவையனைத்தையும் சூடு ஆறும் வரை தனியாக வைக்கவேண்டும். ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால், ஊரே மணக்கும் கமகம நறுமணத்துடன் கரம் மசாலா தயார். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இது ஆறு மாதங்கள் வரை கெடாது. இதை பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்து ரெசிபிக்கள் செய்யும்போது, தூவிக்கொள்ளவேண்டும். இதில் செய்யப்படும் பிரியாணி சூப்பர் சுவையில் அசத்தும். கிரேவிகள் உங்கள் சமைலுக்கே புதிய ருசியைத்தரும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்