Flax Seeds Gel : முக சுருக்கங்கள் கரும்புள்ளிகளால் அவதியா.. உங்க சருமத்தில் மேஜிக் செய்யும் ஆளிவிதை ஜெல் செய்முறை!
Flax Seeds Gel : ஆளி விதை ஜெல் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஆளி விதைகள் பொதுவாக உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைப்பதற்கு ஆளிவிதை பெருமளவு உதவுகிறது. தோல் பாதிப்பைத் தடுக்கிறது.

கறைகள் இல்லாமல், தேவையற்ற கொழுப்பு சேராமல், சரியான உருவத்தைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். ஆனால் பிஸியான வாழ்க்கை, உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகியவை அந்தக் கனவை சிதைக்கின்றன. தோல் பலருக்கு ஆரோக்கியமாக இருப்பது இல்லை. அழகுப் பராமரிப்பை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்கள் இந்த நிலையைச் சரி செய்ய போடோக்ஸ் ஊசிகளைப் போடுவது வழக்கம். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இந்த பிரச்சனையை வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆளி விதை ஜெல் மூலம் தீர்க்க முடியும்.
ஆளி விதை ஜெல் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஆளி விதைகள் பொதுவாக உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைப்பதற்கு ஆளிவிதை பெருமளவு உதவுகிறது. இதேபோல், ஆளி விதை ஜெல் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. தோல் பாதிப்பைத் தடுக்கிறது.
ஆளிவிதை ஜெல் தயாரிக்கும் முறை
ஆளிவிதை ஜெல் மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இதற்கு 2 தேக்கரண்டி ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற விடவும். குறைந்த தீயில் சமைக்கவும். மேலும் அடிக்கடி கிளறவும். அது வெண்மையாக மாற ஆரம்பித்ததும் தீயை அணைக்கவும்.