தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Female Condom : இதோ வந்துவிட்டது பெண்களே உங்களுக்கான காண்டம்! பாதுகாப்பு மற்றும் இன்பமான செக்ஸ் உறுதி!

Female Condom : இதோ வந்துவிட்டது பெண்களே உங்களுக்கான காண்டம்! பாதுகாப்பு மற்றும் இன்பமான செக்ஸ் உறுதி!

Priyadarshini R HT Tamil
Sep 25, 2023 11:30 AM IST

Female Condom : பெண்களுக்கென்று பிரத்யேகமாக உள்ள காண்டம்களை முயற்சித்து பாருங்கள். பாதுகாப்பான மற்றும் இன்பத்தை அள்ளும் செக்ஸ் அனுபவம் வேண்டும் என்றால், இவற்றை முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்.

Female Condom : இதோ வந்துவிட்டது பெண்களே உங்களுக்கான காண்டம்! பாதுகாப்பு மற்றும் இன்பமான செக்ஸ் உறுதி!
Female Condom : இதோ வந்துவிட்டது பெண்களே உங்களுக்கான காண்டம்! பாதுகாப்பு மற்றும் இன்பமான செக்ஸ் உறுதி!

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்களுக்கான காண்டம்கள், உள்புறத்தில் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட காண்டம்கள், ஃபெமிடான்கள் என்று அழைக்கப்படுகிறது. பெண்கள் கர்ப்பமாவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்ககப்பட்டுள்ளது.

இவை உடலுறவின் மூலம் பரவும் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. தேவையற்ற கர்ப்பத்தையும் தடுக்கிறது. இவை மெல்லிய, மிருதுவான, நெகிழ்வானதான தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 நெகிழ்வான வளையங்கள் உள்ளன. அதில் ஒன்று பெண்ணுறுப்பின் பாதையும், வெளிப்புற உறுப்பையும் மறைத்து, விந்தணுக்கள உள்ளே சென்றுவிடாமல் தடுப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிய மற்றும் திறந்துள்ள வளையம், வெளியே தங்குகிறது. வெளிப்புற பெண்ணுறுப்பை மறைக்கிறது. அது சிறிய முடிய வளையம் பெண்ணுறுப்பில் பொருந்தியுள்ளது. உள்ளே இருக்கும் வளையம்தான், கருப்பை வாய்க்கு விந்தணுக்கள் செல்வதை கட்டுப்படுத்துகிறது. காண்டமையும் எவ்வித கசிவுகளும் ஏற்படாமல் காக்கிறது. இவை பயன்படுத்துவதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரப்பர் கொண்டு வடிவமைக்கப்படாததால், ரப்பர் சென்சிட்விட்டி உள்ளவர்களும் பயன்படுத்த ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் ஆரோக்கியத்தை ஆண்களும், பெண்களும் மேம்படுத்த வேண்டுமெனில் பெண்கள் காண்டம்கள் மிகமிக அவசியமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான உடலுறவுடன், அவர்களின் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆண், பெண் இருவருமே இதை அணிந்துகொள்வது இதன் சிறப்பாகும். இது இன்பத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஆண்கள் காண்டம், இன்டிமேட் ப்ரொக்ட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களே இந்த காண்டம்களையும் வழங்குகின்றன. இவை சாதாரண மக்களால் சமாளிக்க கூடிய விலையிலும் கிடைக்கின்றன. எனவே பெண்கள் இதை பயன்படுத்தி, தங்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்