தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Mass : புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி!

Egg Mass : புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2023 12:30 PM IST

Egg Mass : புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி. இப்படி செய்தால் சுவை அள்ளும்.

Egg Mass : புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி!
Egg Mass : புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வேக வைத்து முட்டை – 4

(முட்டையை வேக வைத்து, ஓட்டை எடுத்துவிட்டு, முட்டையை கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்)

பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் நறுக்கியது

தக்காளி – நீளவாக்கில் நறுக்கியது

பச்சை மிளகாய் – 2

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – சிறிதளவு

மட்டன் குழம்பு – 2 கரண்டி

அல்லது

சிக்கன் குழம்பு – 2 கரண்டி

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு தோசை தவாவை சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித்தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதில் முட்டையை சேர்த்து பிரட்டிவிட்டு, மட்டன் குழம்பு அல்லது சிக்கன் குழம்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அது சுண்டும் வரை பிரட்டி எடுத்தால், புதுக்கோட்டை முட்டை மாஸ் ரெடி.

கடைசியாக கொஞ்சம் மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி இறக்க சுவை அள்ளும். 

இதை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், ரொட்டி, நான் என என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும். காரம் மற்றும் அசைவப்பிரியர்களின் தேர்வு. புதுக்கோட்டை முட்டை மாஸ்க்கு கூட்டம் அள்ளும். 

இதை அருகில் உள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். அந்தளவுக்கு புகழ் பெற்றது புதுக்கோட்டை முட்டை மாஸ். இந்த முறையில் செய்தால் நீங்கள் வீட்டிலேயே செய்தும் அசத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்