Egg Kalaki : முட்டையை ஒரே மாதிரி செய்து போர் அடித்து விட்டதா? கலக்கி செய்து அசத்திடுங்க! இதோ 2 வகை!
Egg Kalaki : முட்டையை ஒரே மாதிரி செய்து போர் அடித்து விட்டதா? கலக்கி செய்து அசத்திடுங்க! இதோ 2 வகை!
தேவையான பொருட்கள்
கறி முட்டை கலக்கி செய்ய
முட்டை - 1
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
கோழி குழம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
முட்டை கலக்கி செய்ய
முட்டை - 2
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
கறி முட்டை கலக்கி செய்ய
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் சிக்கன் குழம்பு சேர்த்து நன்கு அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்றவேண்டும்.
ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூடவேண்டும்.
முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்ற வேண்டும்.
கறி முட்டை கலக்கி தயார்.
முட்டை கலக்கி செய்ய
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்றவேண்டும்.
ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூடவேண்டும்.
முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்றவேண்டும்.
முட்டை கலக்கி தயார்.
இந்த கலக்கி ஒருபுறத்தில் தான வெந்திருக்கும். உள்ளே அரை வேக்காட்டில் தான் இருக்கும். அதுதான் இந்த கலக்கியின் சிறப்பு. அப்படியே ஒரு புறத்தில் வேகவைத்து தளதளவென எடுக்க வேண்டும். பின்னர் இதை எதற்கும் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம் அல்லது அப்படியே ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்