Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன்! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள்!-egg chapathi egg chapathi kids favourite super tiffen once you taste it you will taste it often - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன்! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள்!

Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன்! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 03, 2024 03:31 PM IST

Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன். இதை ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள். வீட்டில் இனி முட்டை சப்பாத்தி மனம்தான் வீசும்.

Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன்! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள்!
Egg Chapathi : முட்டை சப்பாத்தி; குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான டிபஃன்! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைப்பீர்கள்!

கோதுமை மாவு – ஒன்றரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

முட்டை கலவை செய்ய

முட்டை - 4

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு இளஞ்சூடான தண்ணீரை ஊற்றி, மாவை நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிரித்து, உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவேண்டும். அடுத்து சப்பாத்தியின் ஒருபுறத்தில், செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி மீண்டும் அதை திருப்பிப்போட்டு சுட்டு எடுக்கவேண்டும். இரண்டுபுறமுமே நன்றாக வெந்ததும் முட்டை சப்பாத்தி தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ், ஏதேனும், சைவ, அசைவ கிரேவியை வைத்துக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்தது.

கோதுமையில் வைட்டமின்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், சிங்க மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்தது. இது வைட்டமின் பி சத்து நிறைந்தது. இதில் நிறைய சிங்க, இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.

ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

நீண்ட கால அலர்ஜியை குறைக்கிறது.

மனஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதய நோய் ஆபத்தை குறைக்கிறது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.

மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறிகளை முறைப்படுத்த உதவுகிறது.

முட்டையின் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது.

கோலீன்கள் கொண்டது.

ஒமேகா -3 நிறைந்தது.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

முட்டை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உணவுகளை நீங்கள் அடிக்கடி உணவில் இதுபோல் செய்து சேர்த்துக்கொள்ளவேண்டும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.