Karuveppilai Kuzhambu: தலையில் கை வைத்தாலே முடி கொட்டுகிறதா.. இந்த கறிவேப்பிலை குழம்பு உங்களுக்கு தான்!
இந்த குழம்பு சூடான சாதம், இட்லி தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். இதை மேலும் கெட்டியான பேஸ்ட் போல் செய்து பிரட்களில் தடவி நடுவில் சீஸ் வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பிரட் டோஸ்ட் போல் கூட செய்து கொடுக்கலாம்.
இன்று முடி உதிர்வு வெள்ளை முடி, இளநரை என பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இதற்கு நமது சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமை என பல காரணங்கள். அதிக மன அழுத்தம் தரக்கூடிய பணிச்சுமையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி முடிப்பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு ஏராளாமான சத்தான உணவுகள் உள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது கறிவேப்பிலை.
கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் என்ற மூலப்பொருள் உள்ளது. இவை பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தியை உடலுக்கு தருகின்றன. கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களில் கார்னியா சேதமடையாமலும் கண் பார்வை குறைபாடு இல்லாமலும் காக்கிறது. மேலும் முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. கறிவேப்பிலையில் புரதமும், பீட்டா கரோட்டினும் அதிகமாகவே இருக்கிறது. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை
உளுந்தம்பருப்பு
கடலை பருப்பு
மல்லி
சீரகம்
மிளகு
வெந்தயம்
பச்சை மிளகாய்
வெங்காயம்
பூண்டு
தக்காளி
புளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய்தூள்
எண்ணெய்
வெல்லம்
செய்முறை
முதலில் 100 கிராம் சின்ன வெங்காயம் 2 மிளகாய் 1 தக்காளி யை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் கடலை பருப்பு 2 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வறுத் எடுத்துக்கொள்ள வேண்டும் . பின் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் , சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மிதமான சூட்டில் தனியா நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். கடைசியாக 4 கைபிடி பச்சையான கறிவேப்பிலையையும் அதில் சேர்த்து நன்றாக வதங்கிய பின் ஆறவிட்டு இந்த பொருட்களை எல்லாம் தனியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். அதில் அரைஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.கடுகு வெடித்த பின் இரண்டு கைபிடி பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் 15 சின்ன வெங்காயம் சேர்ந்து வதக்கிய பின் அரைத்து வைத்திருந்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதில் தேவையான பெருங்காயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு எலுமிச்சை அளவு புளித் தண்ணீரை சேர்த்து குழம்பு கெட்டியாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும். கடைசியாக 3 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விரும்பம் உடையவர்கள் விளக்கு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இந்த குழம்பு சூடான சாதம், இட்லி தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். இதை மேலும் கெட்டியான பேஸ்ட் போல் செய்து பிரட்களில் தடவி நடுவில் சீஸ் வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பிரட் டோஸ்ட் போல் கூட செய்து கொடுக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்