தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Do Your Kids Want To Buy Extra Two Idlis And Eat It .. Here Is The Delicious Ellu Podi

Ellu podi: உங்கள் குழந்தைகள் எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி சேர்த்து வாங்கி சாப்பிட வேண்டுமா .. இதோ டேஸ்டான எள்ளு பொடி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 16, 2024 01:31 PM IST

ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவும் எள்ளு பொடி.. எப்படி செய்வது என பார்க்கலாம்

எள்ளு பொடி
எள்ளு பொடி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கருப்பு எள் – 1 கப்

கருப்பு உளுந்து –அரை கப்

கடலை பருப்பு –அரை கப்

வர மிளகாய் – 25

பூண்டு – 10 பல்

புளி – நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை – கைப்பிடி

பெருங்காயம் - 1 ஒரு ஸ்பூன்

கல்லுப்பு – தேவையான அளவு

செய்முறை

அரைக்கப் கருப்பு உளுந்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வாசம் வர ஆரம்பிக்கும் போது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். பின்னர் அதில் அரை கப் கடலை பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். கடலை பருப்பும் நன்றாக சிவந்த பிறகு ஏற்கனவே வறுத்து எடுத்த பிறகு உளுந்துடன் சேர்த்து விட வேண்டும். 

அதில் ஒரு கப் எள்ளையும் சேர்த்து வறுக்க வேண்டும். எள்ளு வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது இதை தனியா ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும். 

அதில் 25 வர மிளகாயை எடுத்து தனியாக வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் பூண்டு மற்றும் புளி சேர்த்து வதக்க வேண்டும். கறிவேப்பிலையையும், கல்லுப்பையும் தனியாக வறுக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பெருங்காய தூளை சேர்த்து கொள்ள வேண்டும்.

அனைத்தையும் ஆற வைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்ய வேண்டும். இதில் முதலில் எள்ளை சேர்க்கக்கூடாது. எள்ளை கடைசியாக சேர்த்து பொடிக்க வேண்டும். எள்ளில் இருந்தும் எப்போது எண்ணெய் வெளியேறும். முதலிலேயே எள்ளை சேர்த்தால் சரியான பொடி பதம் கிடைக்காது. நல்ல பொடி பதம் வேண்டுமென்றால், எள்ளை கடைசியாக சேர்த்து சிறிது நேரம் மிக்ஸியை ஓட்டி எடுக்க வேண்டும். அவ்வளவுதான் நல்ல மணம் மற்றும் சுவை நிறைந்த எள்ளுப்பொடி சாப்பிட தயாராகி உள்ளது.

இதை நீங்கள் சாதம், இட்லி தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த எள்ளு பொடிக்கு வேண்டும் என்றால் மட்டும் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளலாம். எண்ணெய் இல்லாமல் சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும்.

எள்ளின் நன்மைகள் 

எள் விதைகளில் துத்தநாகம், இரும்பு, வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இந்த சிறிய விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. குளிர்கால நோய்களுக்கு எதிராக பாதுகாக்கின்றன. எனவே எள் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பாக இருப்பதுடன் தவிர்க்க முடியாத குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது. எள் விதைகளில் அதிகளவு கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

குளிர்ச்சியான இந்த காலநிலையில் உங்களது உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேலையை எள் விதைகள் செய்கின்றன. இதில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் உடலை வெப்பமாக்க உதவுகின்றன. இப்படி ஏராளாமான நன்மைகள் இதில் நிறைந்துள்ளது. 

 

WhatsApp channel

டாபிக்ஸ்