‘சிரித்து வாழ வேண்டும்’ உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் வழிகள் எவை தெரியுமா?
உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள் எவை?
உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் 8 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்? நீங்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும். எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படியெல்லாம் மகிழ்ந்திருக்கலாம் என்று பாருங்கள். யாருக்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கப்பிடிக்காது. அதற்கு நமது உடலில் ஒளிந்துள்ள மகிழ்ச்சி ஹார்மோன்கள் காரணமாகின்றன. அதிலும் குறிப்பாக செரோட்டினின், டோப்பமைன், எண்டோர்ஃபின் மற்றும் ஆக்ஸிடாசின் ஆகிய ஹார்மோன்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இந்த ஹார்மோன்கள் உங்கள் உடலுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தருகின்றன. ஆரோக்கியமாக இருந்தால் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியமும் சேர்ந்து வரும். உங்கள் உடலில் இந்த மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் வழிகள் என்ன?
உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியை செய்யுங்கள்
யோகா, டான்ஸ் என உங்களுக்கு மகிழ்ச்சியைத்தரும் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு உடற்பயிற்சியைச் செய்யுங்கள். இதனால் உங்கள் உடலில் எண்டோர்ஃபின்கள் உருவாகும். இது இயற்கை வலி நிவாரணிகள் ஆகும். எனவே தினமும் அரை முதல் ஒரு மணி நேரம் செய்தாலே போதும். உங்களின் மனநிலையை மாற்றும். வேக நடை கூட உங்கள் உடலுக்கு ஆச்சர்யமூட்டும் நன்மைகளைத் தரும்.
அதிகாலை சூரியனில் குளிப்பது
நீங்கள் அதிகாலையில் சூரியனில் குளிக்கவேண்டும். ஒரு 15 நிமிடங்கள் செய்தாலே உங்கள் உடலில் செரோடினின்கள் சுரக்கும். இது உங்களை அமைதியாகவும், அன்றைய நாள் முழுவதும் முழு கவனத்துடன் வைத்துக்கொள்ள உதவும். காலையில் வெளியில் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இது உங்களின் உறக்க சுழற்சியையும் முறைப்படுத்தும்.
உங்களுக்கு பிடித்தவர்களை ஆறத்தழுவிக்கொள்வது
தொடுதல், உங்களுக்கு பிடித்தவர்களை ஆறத்தழுவிக்கொள்வது அல்லது கைகளை கோர்த்துக்கொள்வது, இரண்டும் ஆக்ஸிடாசின் வெளியேற உதவும். இது லவ் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. இது உங்களுக்குள் உணர்வு ரீதியான பிணைப்புக்களை உருவாக்கும். உங்களை இதமாக வைத்துக்கொள்ள உதவும்.
நன்றி
நீங்கள் தினமும் எதற்கெல்லாம் நன்றி செலுத்தவேண்டும் என்று எழுதுங்கள். இது உங்கள் உடலில் டோப்பமைன் சுரக்கும் அளவை அதிகரிக்கும். இது உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்ற உதவும். உங்கள் மூளை சிறப்பாக செயல்பட உதவும்.
அதிகம் ஒமேகா 3
உங்கள் உணவில் அதிகளவில் ஒமேகா 3 உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த மீன்கள், வால்நட்கள், ஃப்ளாக்ஸ் விதைகளில் அதிகளவில் ஒமேகா 3 உள்ளது. எனவே அவற்றை அதிகளவில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உங்கள் உடலில் செரோட்டினின்கள் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே இவற்றை அடிக்கடி உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரோமா தெரபி
லாவண்டர், புதினா மற்றும் பெர்காமாட் ஆகிய அடிப்படை எண்ணெய்களைப் பயன்படுத்தி, அரோமா தெரபி எடுத்துக்கொண்டால் அது உங்கள் மனஅழுத்தத்தைப் போக்கும். உங்கள் மனநிலையை மாற்றும். இந்த எண்ணெய்களை கலந்து உங்கள் மணிக்கட்டுகளில் தடவினால், அது உங்களுக்கு நல்ல எண்ணத்தைத் தரும் ஹார்மோன்களை சுரக்கச்செய்யும்.
பழக்கவழக்கங்கள்
உங்களுக்கு பிடித்த பழக்கவழக்கங்களை செய்யும்போது, அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. உங்கள் உடலில் ஹார்மோன்களின் சமநிலையை அதிகரிக்கிறது. எனவே அதற்கான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அவை உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுக்கும் நன்மை தரும். இதனால் நீங்கள் அதிகம் சிரிப்பதை நீங்களே காணலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்