Detoxification Juice : உங்கள் உடலில் உள்ள மொத்த கழிவுகளும் நீங்க தினமும் காலையில் இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்!
Detoxification Juice : உங்கள் உடலில் உள்ள மொத்த கழிவுகளும் நீங்க தினமும் காலையில் இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும். உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும். கழிவுகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் – 1 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)
நெல்லிக்காய் – 1
இஞ்சி – அரை இன்ச்
செய்முறை
சுத்தம் செய்த பூசணிக்காய், பொடியாக நறுக்கிற இஞ்சி மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்த வடித்து அப்படியே பருக வேண்டும்.
உங்களுக்கு இனிப்பாக வேண்டும் என்றால் தேன் சேர்த்துக்கொள்ளலாம். உப்பு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். பச்சையாக குடிக்க விரும்பாதவர்களுக்கான வழிகள் இல்லை. ஆனால் உங்களால் பச்சையாக குடிக்க முடியும் என்றால் அப்படியே குடிக்கலாம். அது மிகவும் சிறந்தது.
காய்களின் அரசி என்று அழைக்கப்படுவது பூசணிக்காய். காரணம் இதில் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் உள்ளன. இந்த பானத்தை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றுப்புண், வாயுத்தொல்லை உள்ளிட்ட வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்ய பூசணிக்காய் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை அருந்தினால், அது உள்ளே சென்று உடலில் அன்று தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும். அன்றைய கழிவுகள் அன்றே வெளியேறுவதுதான் நல்லது. அப்போதுதான் உடலில் கழிவுகள் சேராமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பூசணிக்காயின் விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைந்துள்ளது. நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்கக்கூடிய சத்துக்களும் பூசணிக்காயில் நிறைந்துள்ளது. பூசணிக்காயில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பூசணிக்காய் பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நாளடைவில் அவர்களுக்கு அல்சர் கட்டுப்படுத்தப்படும். அவர்களால் எளிதில் குணமடையவும் முடியும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்