Dandruff Treatment: பொடுகு தொல்லையைப் போக்கும் 2 இயற்கை பொருட்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dandruff Treatment: பொடுகு தொல்லையைப் போக்கும் 2 இயற்கை பொருட்கள்

Dandruff Treatment: பொடுகு தொல்லையைப் போக்கும் 2 இயற்கை பொருட்கள்

I Jayachandran HT Tamil
Jun 01, 2023 09:03 PM IST

பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை தீர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பொடுகு தொல்லையைப் போக்கும் 2 இயற்கை பொருட்கள்
பொடுகு தொல்லையைப் போக்கும் 2 இயற்கை பொருட்கள்

உச்சந்தலையில் உள்ள சரும செல்கள் குவிந்து உதிரும் நிலையை பொடுகு என்று அழைக்கிறோம். இதனால் எரிச்சல், அரிப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

பொடுகு ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் பூஞ்சை தொற்று. இது சருமத்தை வறட்சி அடைய செய்து உதிரச் செய்கிறது. வறண்ட சருமம் முதல் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் பொடுகு தொந்தரவு ஏற்படலாம். இதன் வெளிப்பாடாக வெள்ளை செதில்களை உங்கள் ஆடை மற்றும் தலையின் மேற்பரப்பில் பார்க்க முடியும்.

இரண்டு இயற்கை பொருட்களான தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாறை கொண்டு இந்த பொடுகிலிருந்து சுலபமாக விடுபடலாம். இதன் பயன்படுத்தும் முறை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்-

தேங்காய் எண்ணெய் சருமத்தின் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி, உச்சந்தலையை வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் லேசான பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

ஆழமான கண்டிஷனர்-

உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை தேங்காய் எண்ணெயை தடவவும்.

உங்கள் தலையை ஷவர் கேப் அல்லது வெதுவெதுப்பான துண்டை பயன்படுத்தி மூடி வைக்கவும்.

30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்

பிறகு வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை கொண்டு உங்கள் முடியை அலசலாம்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு-

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் உச்சந்தலைக்கு தடவி, உங்கள் கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும்

20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்புவை கொண்டு உங்கள் முடியை அலசலாம்.

சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ்-

உங்கள் தலை முடியில் நீளத்துக்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாக்கவும்.

வெதுவெதுப்பாக இருக்கும் இந்த எண்ணெயைக் கொண்டு, உங்கள் தலைமுடியை 5-10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

பின் 20 நிமிடங்கள் கழித்து உங்கள் முடியை அலசலாம்.

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெய்

இவ்விரண்டு எண்ணெய்களையும் சம அளவில் எடுத்து கலக்கவும்.

இதனைக் கொண்டு உங்கள் உச்சந்தலைக்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பான துண்டை பயன்படுத்தி தலையை மூடி வைக்கவும்.

இந்த கலவையின் சத்துக்களை உங்கள் தலை முடி மற்றும் சருமம் உறிஞ்சுவதற்கான நேரம் கொடுங்கள். பிறகு 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவைக் கொண்டு உங்கள் தலைமுடியை அலசலாம்.

வெங்காய சாறு-

தேங்காய் எண்ணெயை போலவே வெங்காய சாறிலும் நிறைய பண்புகள் உள்ளன. இது எரிச்சல் மற்றும் அழற்சியை குறைக்கிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்டி மைக்ரோவியல் பண்புகள் லேசான சருமத் தொற்றுகளை சரி செய்யவும், உச்சந்தலையை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் மற்றும் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வெங்காய சாறுடன் எலுமிச்சை சாறு-

வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும்.

இதனைக் கொண்டு உச்சந்தலைக்கு மென்மையான கைகளால் மசாஜ் செய்யவும். இது pH அளவை சீராக்கி, பாக்டீரியாக்களை குறைக்க உதவுகிறது.

20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம்.

வெங்காய சாறுடன் கற்றாழை-

வெங்காய சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து உங்கள் தலைமுடிக்கு தடவலாம். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன.

15-20 வரை காத்திருக்கவும்.

பின் மென்மையான ஷாம்புவை கொண்டு உங்கள் தலைமுடியை அலசலாம்.

வெங்காய சாறு மற்றும் தேன்-

வெங்காய சாறுடன் தேன் கலந்து உங்கள் உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம்.

15 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசவும்.

வெங்காய சாறு மற்றும் வெந்தயம்-

வெங்காய சாறுடன் வெந்தயப் பொடி சேர்த்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலைக்கு தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து ஷாம்புவை கொண்டு முடியை அலசலாம்.

வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்-

தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாறை 2:1 என்று விகிதத்தில் கலந்து கொள்ளவும்.

இதை உங்கள் தலைமுடிக்கு தடவி 15-20 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.

பின் ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசலாம்.

இந்த நடைமுறைகளை செய்து வந்தால் பொடுகு பிரச்னை விரைவில் தீரும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.