Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!-corona virus are there so many dangers of corona vaccine shock research - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!

Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!

Priyadarshini R HT Tamil
Feb 21, 2024 05:30 PM IST

Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!

Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!
Corona Virus : கொரோனா தடுப்பு ஊசியால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆராய்ச்சி!

Global Covid Vaccine Safety Project நிறுவனம், 99 மில்லியன் மக்களிடம் செய்த மிகப்பெரும் ஆய்வில், mRNA, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்குப் பின் நரம்பு மண்டல பாதிப்பு நோய் (GBS-Guillan-Barre Syndrome), இதய தசை மற்றும் வெளியுறையில் அழற்சி, Myocarditis, Pericarditis, மூளை சிரை மண்டலத்தில் ரத்தம் உறைதல் Cerebral Sinus Venous Thromosis போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் ஏற்படுவது எதிர்பார்த்த அளவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளதை உறுதிபடுத்தி, ஆய்வுக் கட்டுரை "Vaccine" பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பிய மருத்துவக் கழகம் செய்த ஆய்வு முடிவுகளும் கொரோனா தடுப்பூசியின் அரிதான, ஆனால் உறுதியான பின்விளைவுகளை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த ஆய்வில் இந்திய புள்ளிவிவரங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றாலும், இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியால் மேற்சொன்ன 4 முக்கிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பின்விளைவுகள் நிகழ வாய்ப்புள்ளதை அறிவியல் தெரிந்த யாரும் மறுக்கமுடியாது.

கொரோனா பாதிப்பில் தேவையைக் கருதி தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்தான முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே, கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது என்றாலும், தற்போதைய ஆய்வு முடிவுகளை கணக்கில்கொண்டு கோவிஷீல்ட் தடுப்பூசி இறப்பை அரிதாக ஏற்படுத்த முடியும் எனும் அறிவியல் உண்மையை நாம் மறக்கக்கூடாது.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமோ (ICMR), தனது சமீபத்திய ஆய்வில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இள வயதினர் மத்தியில் திடீரென ஏற்படும் உயிரிழப்பிற்கு தடுப்பூசி காரணமில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது உலக ஆய்வின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமோ 10,000 பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசிக்குப் பின் மரணித்தாலும், 800க்கும் கீழான இறப்புகளை மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொண்டு, இறப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்றே ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

கட்டுரையில் ஒருபக்க சார்பு (Bias) இருப்பதை மட்டும் இந்திய ஆராய்ச்சிக் கழகம் ஒத்துக்கொண்டுள்ளது.

இந்த உலக ஆய்வில், பல நாடுகளில் இருந்து புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டாலும், அர்சென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து கூடுதல் புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த உலக ஆய்வில், கொரோனா தடுப்பூசிக்குப் பின், உண்மையில் நடந்த உயிரிழப்புகளும், எதிர்பார்த்த உயிரிழப்புகளும் ஒப்பிடப்பட்டது.

(Observed death/Expected death ratio)

இந்த எண்ணிக்கை 1.5க்கு மேல் இருந்தால் கொரோனா தடுப்பூசியால் நிகழும் மரணங்களை கூடுதல் கவனம் செலுத்தி முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்பது அறிவியல் விதியாக இருக்க, கோவிஷீல்ட் தடுப்பூசிக்குப்பின் ஏற்பட்ட நரம்பு மண்டலம் பாதிப்பு Guillan-Barre Syndrome 1.5 எண்ணுக்கு மேலாகவும், மூளை சிரை மண்டலத்தில் ரத்தம் உறைதல் (CVST) எண்-3.23 என அதிகமாக இருப்பதிலிருந்து, கோவிஷீல்ட் தடுப்பூசியால் நிச்சயம் மரணம் நிகழ்ந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

2022, டிசம்பர் 6 வரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்குப் பின் 92,003 பின்விளைவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 0.009% பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் கொரோனா தடுப்பூசிக்குப் பின் இறப்புகள் நிச்சயம் நிகழ்ந்துள்ளன (அரிது என்றாலும், இறப்புகள் நிச்சயம் நிகழ்ந்துள்ளது) என்பது உலக ஆய்வில் உறுதியான பின்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வோ, கொரோனா தடுப்பூசிக்குப் பின் இள வயதினருக்கு ஏற்பட்ட மரணங்களுக்கு தடுப்பூசி காரணமில்லை என சொல்வதை எப்படி ஏற்க முடியும்?

இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு அல்லது இறப்பை பதிவது கட்டாயமாக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகளை பதிவது கட்டாயமில்லை.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்குப் பின்னர் நடந்த மரணங்கள் முறையாக பதிவுசெய்யப்படவில்லை.

தடுப்பூசிக்குப் பின் நிகழ்ந்த மரணங்களில் முறையான பிரேதப்பரிசோதனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறப்பிற்கு காரணம் கொரோனா தடுப்பூசியா? என முழமையாக ஆராயப்பட்டு உறுதிபடுத்தப்படவில்லை.

அதனால் தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக முடிவுகள் இள வயதினருக்கு ஏற்பட்ட திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்ற தவறான முடிவை பதிவுசெய்துள்ளது.

எனவே Vaccine பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரையை பார்த்தாவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், கொரோனா தடுப்பூசியின் காரணமாக நிகழ்ந்த இறப்புகள் அல்லது பின்விளைவுகளை உரிய அறிவியல் விதிகளுடன், ஆய்வுசெய்து மக்களிடம் அறிவிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவது தனிப்பட்ட விருப்பம் என்பதை ஏற்றுக்கொண்டு அரசுகள் ஒருவரை கட்டாயப்படுத்தாமல் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளின் பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.