Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?-coriander leaves thokku a collection of fragrant coriander leaves how about doing it in a way that makes you want to - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?

Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 24, 2024 12:13 PM IST

Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?

Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?
Coriander Leaves Thokku : மணக்கும் மல்லித்தழை தொக்கு! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி?

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 6

வரமல்லி – ஒரு ஸ்பூன்

(இவையனைத்தையும் ட்ரையாக வறுத்து எடுத்து, ஆறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து அரைக்க வேண்டும்)

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை – 2 கைப்பிடி

புதினா – ஒரு கைப்பிடி

(இதையும் வதக்கி ஆறவைத்து தனியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.)

தாளிக்க தேவையான பொருட்கள் 

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 2

பூண்டு – 10 பல் (தட்டியது)

கரைத்த புளி – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

வடித்த சாதம்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இடித்த பூண்டு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அவை பொரிந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதித்தவுடன், மல்லி, புதினா விழுது சேர்த்து நன்றாக கலந்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக உறுகாய் பதத்தில் எண்ணெய் பிரிந்து வரவேண்டும்.

இதை 3 நாட்கள் வெளியில் வைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். ஃபிரட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இது பயணங்களுக்கு ஏற்றது.

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

கொத்தமல்லித்தழையின் நன்மைகள்

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.

செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேபோல் வயிறு உப்புசம் ஆவது தவிர்க்கப்படுவதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்களுக்கு நிறைவான உணர்வை தருவதுடன், குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது - கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கண்களுக்கு நன்மை தருகிறது - கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.