Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!

Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!

Priyadarshini R HT Tamil
Dec 12, 2023 10:00 AM IST

Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!

Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!
Chutney Podi : இனி தினமும் டிபஃனுக்கு சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! இதோ ஈசியான வழி!

பச்சை மிளகாய் – 7 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10 பல்

இஞ்சி – ஒரு இன்ச

புதினா – 2 கட்டு (சுத்தம் செய்தது)

உளுந்தம் பருப்பு – 1 கப்

கடலை பருப்பு – அரை கப்

கல் உப்பு – தேவையான அளவு

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

தாளிக்க

கடுகு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது காய்ந்தவுடன் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள 2 கட்டு புதினாவையும் சேர்த்து நன்றாக சுருள வதக்க வேண்டும்.

முழுவதுமே அடுப்பை குறைவான தீயில்தான் வைக்க வேண்டும். தீயை அதிகரித்தால், அது வறுக்கும் பொருட்களை கருக்கிவிடும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

புதினா சுருண்டு வந்தவுடன், அதில் உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கல் உப்பு மற்றும் எடுத்து வைத்துள்ள புளியை சேர்த்து உப்பின் ஈரம் காயும் வரை வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, இவையனைத்தையும் நன்றாக ஆறவைக்கவேண்டும்.

இவையணைத்தும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு சேர்த்து வெடித்தவுடன், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தும் நன்றாக பொரிந்து வந்தவுடன், இந்த தாளிப்பை அந்த பொடியில் சேர்க்க வேண்டும். இது எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் தாளிப்பு ஆகும்.

புதினா சட்னி பொடி தயார். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவைப்படும்போது எடுத்து தண்ணீர் சேர்த்து கலந்துகொண்டால், சுவையான புதினா சட்னி தயார். உங்களுக்கு வேண்டுமென்றால், அப்போது ஒரு தாளிப்பு சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அப்படியே கூட சாப்பிட சுவை அள்ளும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதற்கு வேண்டுமானாலும் இந்த சட்னியை சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக வீட்டில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்போது, இதுபோன்றவற்றை அரைத்து வைத்துக்கொண்டீர்கள் என்றால், காலையில் டிபஃனுக்கு என்ன சட்னி செய்ய வேண்டும் என்ற பிரச்னை தீர்ந்துவிடும்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை 4 மாதங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.