தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chilli Poppers : குழந்தைகள் விரும்பி உண்ணும் சில்லி பாப்பர்ஸ் – சிறப்பான ஒரு ஈவ்னிங் ஸ்னாக்!

Chilli Poppers : குழந்தைகள் விரும்பி உண்ணும் சில்லி பாப்பர்ஸ் – சிறப்பான ஒரு ஈவ்னிங் ஸ்னாக்!

Priyadarshini R HT Tamil
Sep 11, 2023 12:31 PM IST

chilli Poppers : குழந்தைகள் விரும்பி உண்ணும் சில்லி பாப்பர்ஸ் மற்றும் பால்கோவா இரண்டு ரெசிபிகள் செய்ய தெரிந்துகொள்ளுங்கள். ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகும்.

சில்லி பாப்பர்ஸ் செய்வது எப்படி?
சில்லி பாப்பர்ஸ் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

மொஸரெல்லா சீஸ் - 200 கிராம்

சோளமாவு - அரை கப்

மைதா - ஒரு கப்

இட்டாலியன் சீசனிங் - ஒரு ஸ்பூன்

பேப்பரிக்க/மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

மிளகு தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர்

பிரட் தூள் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை -

சீஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும்.

பின்னர் மிளகாயை கீறி அதில் உள்ள விதைகளை நீக்கவேண்டும்.

பின்னர் சீஸை அதன் உள்ளே வைத்து நிரப்பவேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா, இட்டாலியன் சீசனிங், பேப்பரிக்க அல்லது மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை சரியான பதத்திற்கு கரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் மிளகாயின் நடுவில் குச்சிகளை சீஸ் வெளியில் வராதபடி குத்தி வைக்க வேண்டும்.

அடுத்து மிளகாயை மாவில் தோய்த்து பின்பு பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.

சில்லி பாப்பர்ஸ் இப்போது சாப்பிட தயாராகிவிட்டது. குழந்தைகள் இதை அதிகம் விரும்பி சாப்பிடுவார். இது ஒரு ஸ்டாட்டர் ரெசிபியாகும்.

இதையும் படிங்க

பால்கோவா செய்ய தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - அரை கப்

ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன் 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து சுண்டக்காய்ச்ச வேண்டும். 

பால் பாதியாகும் வரை காய்ச்சிவிட்டு சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் காய்ச்சவேண்டும். 

பாலை சிறிது நேரம் காய்ச்சிய பின்னர் ஏலக்காய் பொடியை சேர்த்து பாலின் அடர்த்தி குறையும் வரை காய்ச்சவேண்டும். 

சுவையான மற்றும் இனிப்பான பால் கோவா சாப்பிட தயாராகிவிட்டது. 

நன்றி - ஹேமா சுப்ரமணியன் 

WhatsApp channel

டாபிக்ஸ்