தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Chutney: குழந்தைகளுக்கு பிடித்த கண் கவரும் பீட்ரூட் சட்னி.. இப்படி செஞ்சு பாருங்க!

Beetroot Chutney: குழந்தைகளுக்கு பிடித்த கண் கவரும் பீட்ரூட் சட்னி.. இப்படி செஞ்சு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 31, 2023 12:30 PM IST

சூடான இட்லி, தோசை, சப்பாத்திக்கு சரியான காமினேஷன் இந்த பீட்ரூட் சட்னி. சூடான சாதத்துடனும் சாப்பிட ருசி அட்டகாசமாக இருக்கும்.

பீட்ரூட் சட்னி
பீட்ரூட் சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பீட்ரூட்

தேங்காய்

கடலை பருப்பு

உப்பு

சின்ன வெங்காயம்

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய்

உளுந்தம்பருப்பு

புளி

இஞ்சி

பூண்டு

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் 3 ஸ்பூன் உளுந்தம்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். உளுந்தும் கடலையும் நன்றாக வறுத்து வரும் போது ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். இதையடுத்து காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய், பச்சை கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். பாதி வதங்கிய பின் ஒரு கைபிடி சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின் பீட் ரூட்டை நன்றாக வதக்க வேண்டும். பீட்ரூட் ஒரு 15 நிமிடம் வரை வதங்கிய பின் அதை எடுத்து ஆற விட வேண்டும். இதில் ஒரு குட்டி நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு வாணிலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு , சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் கொஞ்சம் கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது தாளித்த பொருட்களை சட்னியில் சேர்த்து கலந்து எடுத்தால் ருசியான பீட்ரூட் சட்னி ரெடி.

இது சூடான இட்லி, தோசை, சப்பாத்திக்கு சரியான காமினேஷன் இந்த பீட்ரூட் சட்னி. சூடான சாதத்துடனும் சாப்பிட ருசி அட்டகாசமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்