தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Chettinadu Tomato Chutney Chettinadu Tomato Chutney The Aroma While Boiling In The Oven Is Uplifting

Chettinadu Tomato Chutney : செட்டிநாடு தக்காளி சட்னி! அடுப்பில் கொதிக்கும்போதே வாசம் ஆளை தூக்கும்!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 11:56 AM IST

Chettinadu Tomato Chutney : செட்டிநாடு தக்காளி சட்னி! அடுப்பில் கொதிக்கும்போதே வாசம் ஆளை தூக்கும்!

Chettinadu Tomato Chutney : செட்டிநாடு தக்காளி சட்னி! அடுப்பில் கொதிக்கும்போதே வாசம் ஆளை தூக்கும்!
Chettinadu Tomato Chutney : செட்டிநாடு தக்காளி சட்னி! அடுப்பில் கொதிக்கும்போதே வாசம் ஆளை தூக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சின்ன வெங்காயம் – 20

பூண்டு பற்கள் – 6

தக்காளி – 5

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய்வற்றல் – 9

கடுகு உளுந்து – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு கனமான கடாய் அல்லது தோசைக்கல்லை சூடாக்கி அதில் மிளகாய்வற்றலை குறைவான சூட்டில் கருஞ்சிவப்பு நிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.

அவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் கொர கொரப்பாக பொடித்துக் கொள்ளவேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய தக்காளி மற்றும் புளியை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும்.

தக்காளி நன்றாக குழைந்து தண்ணீர் பதம் இல்லாமல் வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவேண்டும். ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதங்கியவுடன், கொர கொரப்பாக பொடித்து வைத்துள்ள மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவேண்டும்.

பின் அரைத்த தக்காளி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் சட்னியை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.

நன்றி - விருந்தோம்பல். 

தக்காளி நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம்.

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்