செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா! பெயரை கேட்டாலே அதிருதில்ல! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா! பெயரை கேட்டாலே அதிருதில்ல! இதோ ரெசிபி!

செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா! பெயரை கேட்டாலே அதிருதில்ல! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Dec 05, 2024 02:03 PM IST

செட்டிநாடு தக்காளி குருமா செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா! பெயரை கேட்டாலே அதிருதில்ல! இதோ ரெசிபி!
செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா! பெயரை கேட்டாலே அதிருதில்ல! இதோ ரெசிபி!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது செட்டிநாடு தக்காளி குருமா செய்யலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 10 (சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும் அல்லது அரைத்துக்கொள்ளவேண்டும்)

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

முந்திரிப் பருப்பு – 8

பூண்டு – 4 பல்

சோம்பு – அரை ஸ்பூன்

தேங்காய் துருவல் – ஒரு கப்

கசகசா – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

கடுகு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

தேங்காய்த் துருவலில், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளித்து எஞ்சிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவை நன்றாக மசிந்து வதங்கும் வரை வதக்கவேண்டும்.

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவேண்டும். மல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.

செட்நாடு தக்காளி குருமா தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து டிஃபனுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் நீங்கள் ருசிக்கத் தூண்டுவீர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.