Healthy Fruits: பெர்ரி டூ ஆப்பிள்..உங்கள் ஆரோக்கியம் மேம்பட கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன? - லிஸ்ட் இதோ!
Healthy Fruits: மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில பழங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்…

மழைக்காலம் வந்துவிட்டாலே ஜில்லென பெய்யும் மழையுடன் சேர்த்து பலவிதமான நோய்களும் வந்துவிடும். எவ்வளவு முயற்சி செய்தாலும் சில உடல்நலப் பிரச்சனைகளை தவிர்க்க முடியாது. அதனால் தான் இந்த சீசனில் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள்
டெங்கு காய்ச்சல், மலேரியா, சீசன் ஜுரம், டைபாய்டு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களும் மழைக்காலத்தில் ஏற்படும். ஆனால், சில வகையான பழங்கள் இந்த உடல்நல பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். இந்த பழங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்க பருவகால பழங்களை உண்ணலாம். அந்த பட்டியலை இனி பார்ப்போம்..
நீல பெர்ரி
ப்ளூ பெர்ரி பழங்கள் மழைக்காலத்தில் கிடைக்கும். குறைந்த கலோரிகள் கொண்டுள்ளதால் இவற்றை உட்கொள்வதால் இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த பழம் மழைக்காலத்தில் வரும் சிறு நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
