Health Tip: பயங்கர வலியைத் தரும் முடக்குவாதத்தை தடுக்க முடியுமா?
பயங்கர வலியைத் தரும் முடக்குவாதத்தை தடுக்க முடியுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பயங்கர வலியைத் தரும் முடக்குவாதத்தை தடுக்க முடியுமா?
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் உடல் நலம் நன்றாக இருக்கும். அன்றாடம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆனால் குடல் ஆரோக்கியம் பேணப்படும். நல்ல நுண்ணுயிரியுடன் கூடிய குடல் ஆரோக்கியம் இருந்தால் முடக்குவாதத்தை தடுக்கலாம்.
முடக்கு வாதம் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். ஆட்டோ இம்யூன் என்றால் நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நமது சொந்த உடல் செல்களை தாக்குகிறது. இது முதன்மையாக மூட்டுகளை பாதிக்கிறது.
அத்துடன் ரத்த சோகை, கண் சம்பந்தம், நுரையீரல் ஈடுபாடு, நரம்பு மண்டலம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.