Broccoli vs Cauliflower: ப்ரோக்கோலி vs காலிஃபிளவர் எதை சாப்பிடுவது மிகவும் நல்லது?
காலிபிளவர், ப்ரோக்கோலி இரண்டும் இரட்டையர்கள் போல. இந்த இரண்டு உணவுகளில் எது அதிக நன்மை பயக்கும் என்பதை பலர் அறிய விரும்புகிறார்கள். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

காலி பிளவர், ப்ரோக்கோலி இரண்டின் நிறங்களும் வெவ்வேறானவை, ஆனால் வடிவங்கள் ஒன்றுதான். காலிபிளவர், ப்ரோக்கோலி இரண்டும் இரட்டையர்கள் போல. இந்த இரண்டு உணவுகளில் எது அதிக நன்மை பயக்கும் என்பதை பலர் அறிய விரும்புகிறார்கள். இரண்டில், ப்ரோக்கோலியின் விலை சற்று அதிகம், காலிஃபிளவரை பொறுத்தவரை அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் மலிவு விலையில் கிடைக்கிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பூ என்று கூறலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த பச்சை ப்ரோக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இது அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்தது.
