Brinjal Kara kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!-brinjal kara kulambu make this delicious brinjal curry kulambu - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Kara Kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!

Brinjal Kara kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!

Priyadarshini R HT Tamil
Mar 05, 2024 10:36 AM IST

Brinjal Kara kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!

Brinjal Kara kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!
Brinjal Kara kulambu : உச்சு கொட்ட வைக்கும் சுவையில் இப்டி செய்ங்க கத்திரிக்காய் காரக்குழம்பு!

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சின்ன வெங்காயம் – 25

பூண்டு – 25 பற்கள்

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

புளி கரைசல் – ஒரு கப்

வெல்லம் – ஒரு ஸ்பூன்

செய்முறை

காரக்குழம்பு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த ஒரு உணர்வைத்தரும். அதன் சுவை எப்போது வித்யாசமாக இருக்கும்.

ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்புன் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்துவுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு முழுதாகவே இருக்கலாம். இது முழுமையாக வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவேண்டும். (அரைத்தும் சேர்க்கலாம்)

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் பொடி என அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்கிவிடவேண்டும்.

இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போகும் அளவுக்கு மசாலா வேக வேண்டும்.

இது சாதம், தோசை என அனைத்துக்கும் ஏற்றது. இந்த குழம்பை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

எண்ணெய் பிரிந்து வரும்போது ஒரு கப் புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். அடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வேண்டும். இதற்கு கருப்பு புளி எடுக்கக்கூடாது.

பின்னர் நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். கத்தரிக்காய் வெந்தவுடன் இதை இறக்கிவிடலாம்.

மூடிவைத்து குறைவான தீயில் நன்றாக வேகவிடவேண்டும். உப்ப ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு, சிறிது வெல்லம் சேர்க்க வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை தூவி இறக்கவேண்டும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

பொதுவாகவே புளிக்குழம்பு வகைகளே அடுத்த நாள்தான் சுவையாக இருக்கும். எனவே இதை வைத்து, வைத்து சாப்பிட சுவை அள்ளும்.

கத்தரிக்காயின் நன்மைகள்

கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.

அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.

கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.