Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி?-birthday wishes did you miss your loved ones birthday heres how to say late greetings - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி?

Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 28, 2024 06:25 AM IST

Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி என்று தெரிவித்துக்கொள்ளுங்கள்.

Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி?
Birthday Wishes : அன்பானவர்களின் பிறந்த நாளை தவற விட்டீர்களா? இதோ தாமத வாழ்த்துக்களை தெரிவிப்பது எப்படி?

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

நண்பர்களுக்கு தாமத பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நான் உனது பிறந்த நாளை மறந்துவிட்டேன். ஆனால் உனது பிறந்த நாளுக்காக தாமதமாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இழந்த நேரத்தை சரிகட்ட நாம் மீண்டும் கொண்டாடுவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கூறாமல் இருப்பதற்கு தாமதமாகக் கூறுவது நல்லது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நீ உனது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பாய் என்று நம்புகிறேன். தாமத பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இது தாமதமான வாழ்த்துக்கள்தான். ஆனால் இதமான இதய வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மன்னிக்க, உனது சிறந்த நாளை நான் மறந்துவிட்டேன். ஆனாலும் இப்போதும் உனக்கு சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உனது பிறந்தநாள் மகிழ்ச்சியாலும், அன்பாலும் நிறைந்து வழிந்திருக்கும் என நம்புகிறேன். அது உனக்கானதுதான். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் உனது பிறந்த நாளை மிஸ் செய்துவிட்டேன். ஆனால் நமது நட்பு எப்போதும் எனது மனதில் இருகுகம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வானத்து நட்சத்திரம், சூரியன், நிலவு போல் ஜொலிக்கும் ஒருவருக்கு தாமத பிறந்தநாள் வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் உனது பிறந்த நாளை தவறவிட்டிருக்கலாம். ஆனால் உனது எண்ணங்கள் எனது மனதில் இருக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தாமதமாக வாழ்த்துவதற்கு முதலில் மன்னிக்கவும். ஆனால் எப்போதும் என் நினைவுகள் உன்னை சூழ்ந்திருக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் உனது பிறந்த நாளுக்கு தாமதமாக வந்திருக்கலாம். ஆனால், எனது வாழ்த்துக்கள் சரியான நேரத்தில் உன்னை அடைந்திருக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எப்போதும் உன்னை கொண்டாட நீ தகுதியானவன். உனக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.