Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃப்ளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - இயக்குநர் அமீர் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃப்ளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - இயக்குநர் அமீர் காட்டம்!

Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃப்ளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - இயக்குநர் அமீர் காட்டம்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 05:14 PM IST

Ameer Speech: என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால், அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். - இயக்குநர் அமீர் காட்டம்!

Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்
Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்
இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர் பேசும்போது, “ உங்களுடைய படத்தின் முன்னோட்ட காட்சியை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். அதை பார்த்தபோது என்னுடைய பார்வையில் அதில் தேவை இல்லாமல் ஹீரோவை முன்னிலைப்படுத்துவது போல இரண்டு ஷாட்டுகள் இருந்தன. அதனால் படம் வெளியாவதற்கு முன்பாக இன்னும் சில இயக்குநர்களை அழைத்து, அவர்களுக்கு படத்தை திரையிட்டுக் காட்டி, படம் குறித்தான சில சீரமைப்பு விஷயங்களை மேற்கொண்டு, ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் பட்ட கஷ்டம் மக்களிடம் போய் சேரும்.

கொட்டுக்காளி தோல்வியடைந்தது ஏன்?

சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுதான் அந்த படத்தின் வெற்றி. அதேசமயம் பக்கத்தில் இருக்கின்ற ‘கொட்டுக்காளி’ படம் திரைப்பட விழாக்களுக்கான சினிமா. அதனால் அது நல்ல படம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அப்படி திரைப்பட விழாக்களில் விருதுகளை பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையரங்குகளில் மற்ற படங்களுடன் கொண்டு வந்து போட்டி போட வைப்பதே ஒரு வன்முறைதான்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அது எனக்கு ஏற்புடையது அல்ல. அப்படி செய்யவே கூடாது. விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்று கூட பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணம், அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு உங்கள் படத்தை பார்ப்பது தான். அதனால் அவர்களுக்கு அந்த உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால், அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற படங்களுக்கு அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்து விட வேண்டும்.

அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அதை ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு விற்றிருக்கலாம். அதிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுபவர்கள் ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்த்துக் கொள்வார்கள். கெவி படம் கூட அப்படி எடுக்கப்பட்டிருக்கலாம். நாளை இதை திரையரங்குகளில் கொண்டு வந்து வைத்துவிட்டு ரசிகர்கள் பார்க்கவில்லையே என அவர்களை குறைபட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் மக்களிடம் சேரும் விதமாக இந்த கெவி படத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.” என்று பேசினார்.

முதல்வரிடம் செல்ல வேண்டும்

மேலும் பேசிய அமீர் கெவி படத்தின் சில காட்சிகளை பார்த்தபோது ஏன் என்னிடம் இந்த கதையை எடுத்துக்கொண்டு வராமல் போனார்கள், இதை நாம் பண்ணிக் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றியது. சில ஷாட்டுகளை பார்க்கும்போது படத்தை சரியாக எடுத்து இருக்கிறீர்கள் என தோன்றுகிறது. முழுப்படமும் அந்த உணர்வைக் கொடுத்து விட்டால் வெற்றி தான். எப்படி ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக முதல்வர் பார்த்தாரோ அதேபோல உங்களது படமும் நன்றாக இருந்தால் பத்திரிகையாளர்கள் தங்கள் விமர்சனங்கள் மூலமாக இந்த படத்தை தமிழக முதல்வர் பார்க்க வேண்டும் என கோடிட்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஏதாவது மாற்றம் அந்த மக்களுக்கு நிகழும் என்று நானும் காத்திருக்கிறேன்” என்று தனது பேச்சில் ஆதங்கத்தையும் நம்பிக்கையயும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.