தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Biriyani : சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி – பிரியாணிக்கு பெஸ்ட் சாய்ஸ் எது? – எப்படி சமைப்பது – டிப்ஸ்!

Biriyani : சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி – பிரியாணிக்கு பெஸ்ட் சாய்ஸ் எது? – எப்படி சமைப்பது – டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Sep 02, 2023 11:07 AM IST

Biriyani : ருசியான பிரியாணி சமைக்கும் டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ருசியும் சிறப்பாக இருக்காது. பாஸ்மதி அரிசி, பிரியாணியின் மசாலா சுவையை முழுவதும் உள்வாங்காது. சீரகச் சம்பா, உள்ளதை உள்ளபடியே உள்வாங்கி, அதில் அதன் சுவையையும் சேர்த்தால், பிரமாதமாக இருக்கும். பாஸ்மதி அரிசியை சூடு ஆறுவதற்குள் உண்ணவேண்டும்!

பிரியாணி சாப்பிடும் 10 நிமிடத்திற்கு முன் மிதமான சூட்டில் 2 ஸ்பூன் அல்வா அல்லது கேசரி சாப்பிடுவது (ஸ்வீட் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது) நல்லது பொதுவாகவே நமது பாரம்பரிய சாப்பிடும் முறைப்படி, முதலில் இனிப்பை சாப்பிட அதில் இருந்து உருவாகும் உமிழ்நீர் நமது உணவை செரிக்க வைக்க உதவும்.

சைவ சாப்பாட்டில் நாம் சாம்பார்ருக்கு மட்டும் வாங்கும் அளவு சாதத்தின் அளவே (கொஞ்சம் கூடலாம்) பிரியாணியை வாங்கவும், பிரியாணியில் மினிமம் 3 கறி துண்டுகளாவது இருப்பது அவசியம். இப்போது ஒரே ஒரு கரண்டி கறி இல்லாத தால்ஸாவை மட்டும் பாதி பிரியாணியின் மீது ஊற்றி சாப்பிடவேண்டும். தாலிச்சா, தயிர்ப்பச்சடி சேர்த்து அதை சாப்பிடவேண்டும். பிரியாணி குழைந்து இருக்கக் கூடாது, மசாலா அளவாக இருக்க வேண்டும், இறைச்சி நல்ல பக்குவத்தில் வெந்திருக்க வேண்டும்.

தயிர் வெங்காயம் புளிக்கவே கூடாது! தால்ஸா காரமாக இருக்கக்கூடாது , சால்னா சிறிது காரமாக இருக்கவேண்டும். மட்டன் பிரியாணிக்கு கறி ரோஜாபூ நிறத்தில் வெந்திருக்க வேண்டும். நல்லி எலும்பை நம் கையால் எடுத்து உதறினாலே மேலிருக்கும் கறி கழன்று தனியே விழவேண்டும். சிக்கன் எனில் நாம் தொட்டதும் கறி நம் விரல்களை பற்றிக்கொள்ள வேண்டும். நாட்டுக் கோழி மட்டும் கொஞ்சம் திடமாக இருக்கும். அதையும் சமைக்கும் விதத்தில் சமைத்தால் கறி கழண்டு வரும்.

பிரியாணி ருசிப்பதற்கு முன் அல்வா சாப்பிடுவதன் ரகசியம் என்ன தெரியுமா?

பிரியாணி மட்டுமல்ல மசாலா மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் முன் இனிப்பு சாப்பிடுவது உங்கள் நாவின் ருசி மொட்டுகளை நல்ல நிலைக்கு கொண்டுவரும். உமிழ்நீர் சுரப்பை சீராக்கும். பிரியாணி சிறிது மசாலா தூக்கலாக தெரிந்தாலும், உங்கள் நாக்கு டிடெக்டர் அதை கண்டுபிடித்துவிடும். முக்கியமாக உங்கள் பசியுணர்வை தூண்டும்.

நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம், ருசி 6 

WhatsApp channel

டாபிக்ஸ்