Benefits of White Beans : தினம் ஒரு தானியம்! ஊட்டச்சத்துக்களின் குடோனாக திகழும் வெள்ளை பீன்ஸின் நன்மைகள்!
Benefits of White Beans : தினம் ஒரு தானியம்! ஊட்டச்சத்துக்களின் குடோனாக திகழும் வெள்ளை பீன்ஸின் நன்மைகள்!
வெள்ளை பீன்ஸ்கள் ஊட்டச்சத்துக்களின் குடோன் என்று அழைக்கலாம். இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற எண்ணற்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஒரு கப் வெள்ளை பீன்ஸில் 242 கலோரிகள் உள்ளன. புரசம் 17 கிராம் உள்ளது. கொழுப்பு 0.6 கிராம், கார்போஹைட்ரேட்கள் 44 கிராம், நார்ச்சத்துக்கள் 11 கிராம், காப்பர் 55 சதவீதம், ஃபோலேட் 36 சதவீதம், இரும்புச்சத்து 36 சதவீதம், பொட்டாசியம் 21 சதவீதம், தியாமைன் 17 சதவீதம், பாஸ்பரஸ் 28 சதவீதம், மெக்னீசியம் 26 சதவீதம், சிங்க் 22 சதவீதம், கால்சியம் 16 சதவீதம், வைட்டமின் பி6 12 சதவீதம், ரிபோஃப்ளாவின் 6 சதவீதம், செலினியம் 4 சதவீதம் உள்ளது.
வெள்ளை பீன்ஸில் காப்பர் ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காப்பர் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கு ஃபோலேட்டுகள் உதவுகிறது. இரும்பு ஹீமோகுளோபின் உற்பத்தி உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய செயல்களை செய்கிறது. அதுதான் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் அனுப்புகிறது.
வெள்ளை பீன்ஸில் பாலிபினால்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்களை நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகிய நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
புரதச்சத்துக்கள் நிறைந்தது
வெள்ளை பீன்ஸ்கள் புரதச்சத்து நிறைந்தது. இதை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் எடுத்துக்கொள்ளும்போது, தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. புரதங்களை கட்டமைக்கும் அமினோ அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊட்டச்சத்துக்களை கடத்தவும், ஹார்மோன் உற்பத்திக்கும் உதவுகிறது. இதை அரிசி, பார்லி, சோளம், கோதுமை உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது தேவையான அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.
நார்ச்சத்துக்களை வழங்குகிறது
வெள்ளை பீன்ஸ்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தினமும் 25 கிராம் நார்ச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆண்கள் 38 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்துள்ளது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. ஃபேட்டி ஆசிட் உற்பத்திக்கு உதவுகிறது.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது
வெள்ளை பீன்ஸில் அதில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் உயர் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். உங்களை அதிகம் சாப்பிடவிடாமல் காக்கும். கெரிலின் என் பசி ஹார்மோன் சுரப்பதை குடிறக்கிறது. உங்களை இயற்கையிலே குறைவாக சாப்பிட வைக்கிறது.
வெள்ளை பீன்ஸ்களை பல உணவுகளில் கலந்து சாப்பிடலாம். சூப் செய்யலாம், பச்சையாகவும், காய்ந்ததும் கிடைக்கும். இவற்றை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்துதான் சமைக்க வேண்டும். ஊறவைப்பது அந்த பருப்பை மிருதுவாக்கி, செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உலகம் முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது. இது பல வகைகளில் கிடைக்கிறது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இது சிறப்பான தேர்வு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்