தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Baking Soda Benefits : பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!

Baking Soda benefits : பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 09, 2024 01:49 PM IST

Baking Soda benefits : பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. பருக்களைப் போக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து பருக்கள் மீது தடவலாம்.

பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!
பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!

Baking Soda benefits : இன்றைய சமையல் குறிப்புகளில் பேக்கிங் சோடாவின் பயன்பாடு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. பேக்கிங் சோடா ஆரோக்கியத்திற்கு நல்லதா? அல்லது பேக்கிங் கோடா பயன்படுத்துவதால் உடல் நலச்சிக்கல்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கு வரும். பேக்கிங் சோடா குறிப்பாக பக்கோடா,, பஜ்ஜி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மேலும் சிலர் இட்லி மாவில் சேர்க்கிறார்கள். இதனால் இட்லி மிருதுவாகும். ஆனால் பேக்கிங் சோடாவை அடிக்கடி பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? என்று பலருக்கும் அச்சசம் உள்ளது.

பேக்கிங் சோடாவை யார் தவிர்க்க வேண்டும்

பேக்கிங் சோடா சோடியம் கார்பனேட் என்று அழைக்கப்படுகிறது. இதில் சோடியம் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால் வாய்வு பிரச்சனை அதிகரிக்கும். கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் பேக்கிங் சோடாவை தவிர்க்க வேண்டும். பேக்கிங் சோடாவை அதிகமாகப் பயன்படுத்தினால் நெஞ்செரிச்சல் ஏற்படும். குறிப்பாக அஜீரணம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.