Benefits of Urad dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Urad Dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!

Benefits of Urad dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Jan 29, 2024 10:32 AM IST

Benefits of Urad dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!

Benefits of Urad dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!
Benefits of Urad dal : தினம் ஒரு தானியம்! எலும்புகளை இரும்பாக்க; சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உளுந்தின் நன்மைகள்!

100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

உளுந்தின் நன்மைகள்

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

உளுந்து உங்கள் செரிமான மண்டலத்துக்கு நல்லது ஏனெனில் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவ்விரு நார்ச்சத்துக்களும், செரிமானத்தை அதிகரிக்கின்றன. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை தடுக்கப்படுகிறது.

இரும்புச்சத்தை அதிகரிக்கிறது

உங்கள் உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது இரும்புச்சத்து. இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன. 

இந்த ஆக்ஸிஜன் சப்ளைதான் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அனீமியா போன்ற கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் உடலுக்கு நன்மையளிக்கின்றன.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது

உங்கள் இதயத்தை சூப்பர் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உங்களை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்து உடலில் முறையான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கிறது. 

இதன் மூலம் தமனி சுவர்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. உளுந்தை வழக்கமாக எடுத்துக்கொண்டால், எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

நீரிழிவு நோயின் நண்பன்

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தினமும் உளுந்தை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உளுந்து உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை சரியாக பராமரிக்கவும், உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது

உங்கள் தலை முடி பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கு உளுந்தை அரைத்து, தயிருடன் கலந்து தலைமுடியின் கால்களில் பூசி சிறிது நேரம் ஊறவிடவேண்டும். 

பின்னர் மிருதுவான ஷாம்பூவில் தலையை அலசினால் தலைமுடி உறுதியாவதுடன், பளபளப்பாகவும் இருக்கும். உளுந்தில் உள்ள புரதம், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.

உளுந்து உடல் எடையை குறைக்கிறது

உளுந்தில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் வயிறை நிறைந்த உணர்வுடன் வைத்து, இடையில் பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் நீங்கள் இடையில் சாப்பிடும் ஸ்னாக்ஸ் கட்டுப்படுத்தப்படுகிறது. 

அதனால், உளுந்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது நீங்கள் இடையில் ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு கலோரிகள் அதிகரித்துக்கொள்வதை தடுக்கிறது.

உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது

வயோதிகம் மற்றும் வாழ்வியல் முறை போன்ற காரணங்களால் உங்கள் உடலில் உள்ள எலும்பு வலுவிழந்து, பலவீனமாகிறது. உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், வலுவாக வைத்துக்கொள்ளவும் உங்கள் உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. 

உளுந்தில் இந்த சத்துக்கள் அனைத்தும் உள்ளது. அது உங்கள் எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி வலுவாக்குகிறது. மேலும் உங்களுக்கு எலும்பு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதற்கு நீங்கள் உளுந்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மெனோபாஸ் காலங்களில் பெண்களின் எலும்புகள் மோசமடையும். இதனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், பெண்கள் உளுந்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது

உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது. உளுந்து சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை அடித்து வெளியேற்றுகிறது. 

இதன் மூலம் நீங்கள நன்முறையில் சிறுநீர் கழிக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. உங்கள் சிறுநீரகம் நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

உங்கள் சருமத்துக்கு நல்லது

உளுந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு,ச்சத்து உடலில் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரித்து உங்கள் சருமத்துக்கு இயற்கையாகவே நல்ல நிறத்தை வழங்குகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளக்கிறது. உளுந்தை அரைத்து உங்கள் சருமத்தில் பூசினால் சூரியஒளியால் ஏற்படும் நிறமாற்றம், முகப்பருக்களை சரிபடுத்துகிறது.

ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது

ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஆண்மையின்மை, முன்னரே விந்து வெளியேற்றம் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உளுந்து உதவுகிறது.

உளுந்தில் பலவகை உணவுகள் செய்யலாம். குறிப்பாக நாம் தினமும் உண்ணும் இட்லி, தோசையில் அதிகமாக பயன்படுத்தப்படுவது உளுந்து. மேலும் இதில் லட்டு, கஞ்சி என பல வகை உணவுகளும் செய்யலாம். அனைத்து வகையிலும் உளுந்தை சேர்த்து ஊட்டம் பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.