Tamarind: புளியில் இத்தனை நன்மைகள் இருக்கா? - அப்ப ஒரு ரசத்தைப்போடவேண்டியது தான்!
புளியில் இருக்கும் நன்மைகள் குறித்து அலசுகிறது, இக்கட்டுரை.
சமையலில் புளி சேர்ப்பது நல்லதா?
ஆறு வகையான சுவைகளில் புளிப்பு சுவையும் ஒன்று. இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
- புளியில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகிய மூன்றும் இணைந்து இருப்பதால், இவற்றை நாம் உணவில் எடுக்கும்போது, நம் உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் இருக்கும் கொழுப்பினையும் குறைக்க உதவும்.
- புளியில் நார்ச்சத்து அதிகம். கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.
- தினமும் புளியில் ரசம் வைத்து சாப்பிட்டால், வயிற்று உபாதைகள் நீங்கும்.
- புளியில் வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
- புளியினை உணவில் சேர்ப்பதால் ஜீரணம் எளிதாகிறது.
- சர்க்கரையினை கட்டுக்குள் வைத்திருக்க, புளி உதவுகிறது.
- புளியினை உணவில் சேர்ப்பதன் மூலம், நமது எடை குறையும்.
- இதயத்தினை வலுப்படுத்த புளியில் இருக்கும் மூலக்கூறுகள் உதவுகின்றன.
- அதேபோல், புளியினை உணவில் சேர்ப்பதால், புற்றுநோய் தொடர்பான கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.
- புளி வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்ற முக்கியப் பங்காற்றுகிறது.
- புளியில் செய்யப்படும் உணவுகளை உண்பதால் இருமல், சளி மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்கள் மட்டுப்படுகின்றன.
- புளியை உணவில் எடுத்துக்கொண்டால், தோல் பளபளப்பாகும்.
- புளியில் இருக்கும் சில தீமைகள்: அல்சர் இருக்கும்போது புளியை அதிகம் எடுக்கக் கூடாது; குழம்பில் தக்காளியை அதிகம் சேர்க்கும்போது புளியைக் குறைத்துக்கொள்ளலாம்; புளியை வெறும்வயிற்றில் சாப்பிட்டால் தேவையற்ற வயிற்றுக்கோளாறுகளை உண்டு செய்யும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.