Benefits of Suraikai: சுரைக்காயில் நிறைந்திருக்கும் 10 மருத்துவப் பயன்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Suraikai: சுரைக்காயில் நிறைந்திருக்கும் 10 மருத்துவப் பயன்கள்!

Benefits of Suraikai: சுரைக்காயில் நிறைந்திருக்கும் 10 மருத்துவப் பயன்கள்!

I Jayachandran HT Tamil
Jun 09, 2023 09:47 PM IST

சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சுரைக்காயில் நிறைந்திருக்கும் 10 மருத்துவப் பயன்கள்
சுரைக்காயில் நிறைந்திருக்கும் 10 மருத்துவப் பயன்கள்

1. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.

2. சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

3. சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

4. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

5. கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

6. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

7. வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

8. சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

9. மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

10. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.